politics

img

சிபிஐ அதிகாரிகள் இருவருக்கு கொரோனா

தூத்துக்குடி, ஜூலை 22- சாத்தான்குளம் தந்தை- மகன் கொலை வழக்கை விசா ரித்து வரும் சி.பி.ஐ. அதிகாரிகள் இருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு சிகிச்சைக்காக மதுரை இரயில்வே மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியைச் சேர்ந்த தந்தை-மகனான ஜெய ராஜ் மற்றும் பென்னிக்ஸ் இரு வரும், விசாரணையின் பேரில் காவல்நிலையத்திற்கு அழை த்துச் செல்லப்பட்டு போலீசார் நடத்திய கொடூர தாக்குதலில் உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து விசாரித்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் இதை கொலை வழக் காக மாற்றி, இதில் தொடர்புடைய 10 பேரை கைது செய்து சிறை யில் அடைத்தனர்.

இதனை தொடர்ந்து இந்த வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டது. தில்லியில் இருந்து வந்த சி.பி.ஐ. அதிகாரிகள் குழு, சாத்தான்குளம் சம்பவத்தில் தொடர்புடைய அனைத்து போலீ சாரிடமும் விசாரணை நடத்தினர். ஜெயராஜ், பென்னிக்ஸின் உற வினர்கள், நண்பர்கள் என அனைவரிடமும் சி.பி.ஐ. அதி காரிகள் விசாரணை மேற் கொண்டனர். விசாரணையின் போது இந்த சம்பவத்தில் தொடர்புடைய இடங் களான சாத்தான்குளம் காவல் நிலையம், கோவில்பட்டி சிறைச் சாலை, அரசு மருத்துவமனை என அனைத்து இடங்களுக்கும் சி.பி.ஐ. அதிகாரிகள் சென்று வந்த னர். மேலும் தற்போது 3 காவலர் களை சி.பி.ஐ. அதிகாரிகள் தங்கள் காவலில் எடுத்து விசாரித்து வந்தனர்.  இந்நிலையில் சி.பி.ஐ. அதி காரிகள் இருவருக்கு கொரோனா  உறுதி செய்யப்பட்டு சிகிச்சைக் காக மதுரை இரயில்வே மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள் ளனர். இதனால் ஒரு நாள் முன்பாகவே விசாரணை முடி த்துக் கொள்ளப்பட்டு புதன் அன்று 3 காவலர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட 3 காவலர்களுக்கும் ஆகஸ்ட் 5 வரை நீதிமன்றக் காவல் விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 

;