politics

img

பொதுச் செயலாளர் மேசையிலிருந்து...

நாங்கள் மத்தியில் ஆட்சியில் இருந்தால் சுகாதாரத்துறை தொடர்பான அனைத்தும் தேசியமயமாக்கி இருப்போம் என கேரளா சுகாதார அமைச்சர் ஷைலஜா டீச்சர் அவர்கள் கூறியுள்ளார். இது மிகச்சரியான ஒன்று.

                          ***************

ஸ்பெயினை பின்பற்றி மருத்துவமனைகள் மற்றும் சுகாதாரம் தொடர்பான அனைத்து பிரிவுகளையும் தேசியமயமாக்கிட வலியுறுத்தி ஊரடங்கின் பொழுது பிரதமருக்கு நான் கடிதம் எழுதினேன். ஆனால் பிரதமர் அலுவலகம் அத்தகைய கடிதம் வந்தது குறித்த தகவல் கூட அனுப்பவில்லை. மக்களின் வாழ்வு மீது இந்த கொடூரமான தாக்குதல் கடந்த ஒரு வருட காலமாகவே உருவாகிக்கொண்டிருந்தது. இதற்கு காரணமான இந்த அரசாங்கம் வெளியேற வேண்டும்.

                          ***************

சுதந்திர இந்தியாவின் மனிதகுல சுகாதார நெருக்கடி ஆழமாகிக் கொண்டுள்ளது. ஆக்சிஜனும் இலவச தடுப்பூசிகளும் போர்க்கால அடிப்படையில் தரப்படாவிட்டால் மோடி அரசாங்கத்தின் கிரிமினல்செயலின்மை மேலும் மேலும் உயிர்களை பலிவாங்குவதைநிறுத்த இயலாது.      அரசே! செயல்படு அல்லது வெளியேறு!

                          ***************

இரண்டாவது அலை எச்சரிக்கை அதனை எதிர்கொள்ள தயாரிப்பு பணிகள் ஆகியவை குறித்து நாடாளுமன்ற நிலைக்குழு சென்ற ஆண்டு நவம்பர்  மாதமே ஆய்வறிக்கை கொடுத்தும் இந்த அரசாங்கம் அதனை கவனிக்கவில்லை. மார்க்சிஸ்ட் கட்சி சார்பாக சுகாதார கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும் எனவும் இலவச தடுப்பூசி அனைவருக்கும் உத்தரவாதம் செய்ய வேண்டும் எனவும் பலமுறை கோரிக்கை முன்வைத்தோம். அதனையும் இந்த அரசு செவிமடுக்கவில்லை.விளைவு? மக்கள் இன்று நினைத்து கூட பார்க்க இயலாத கடுமையான துன்பங்களில் சிக்கியுள்ளனர். இதற்கு ஆட்சியில் தொடர்வதற்கு அருகதை உள்ளதா?

;