politics

img

பொதுச் செயலாளர் மேசையிலிருந்து...

பட்ஜெட் ஒதுக்கீடு ரூ.35,000 கோடி முழுவதும் தடுப்பூசி வாங்க செலவுசெய்யுங்கள். சர்சார்ஜ் மற்றும் செஸ் (cess) எனப்படும் கூடுதல் வரி அனைத்தையும் ஒருமுகப்படுத்தி தடுப்பூசிகளுக்கு பயன்படுத்துங்கள்.தடுப்பூசிகளை இறக்குமதி செய்யுங்கள். காப்புரிமை அகற்றப்படுவதால்    “கட்டாய உரிமம்” அடிப்படையில் இந்தியாவில் பொதுத்துறை உட்பட  பல நிறுவனங்களை தடுப்பூசி தயாரிக்க அனுமதியுங்கள்.ஒரே தடுப்பூசி கொள்கைதான் உள்ளது என்பதை மோடிக்கு புரியவைக்க வேண்டும். அது: இந்தியா முழுவதும் அனைவருக்கும் இலவச தடுப்பூசி திட்டம்.

                                         ******************

பெட்ரோல் விலை உயர்வு சரக்கு போக்குவரத்து விலையை உயர்த்துகிறது. இதனால் உணவு மற்றும் காய்கறி போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்கிறது. பணவீக்கம் அதிகரிக்கிறது. ஏற்கனவே பெருந்தொற்று/ வேலை இழப்பு/ வருமானம் இழப்பு ஆகியவற்றால் அலைக்கழிக்கப்படும் மக்கள் மீது சுமத்தப்படும் இந்த விலை உயர்வுவெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல! மோடி அரசாங்கத்தின் ஒரேநோக்கம் தேசத்தையும் மக்களையும் கொள்ளையடிப்பதுதான்! கிரிமினல் நிர்வாகம்!

                                         ******************

பிரதமரும் உள்துறை அமைச்சரும் கண்ணில் படவே இல்லையே! எங்கே அவர்கள்?

13 எதிர்க்கட்சிகள் சில ஆலோசனைகளை வழங்கினர். ஆனால் மோடி அரசாங்கத்திடமிருந்து எந்த பதிலும் இல்லை.இந்த மரணங்கள் நிறுத்தப்பட வேண்டும். இப்பொழுது அக்கறையில்லாமல் இருப்பது போல வேறு பெரிய இந்திய விரோதச் செயல் எதுவும் இருக்க இயலாது. கண் விழியுங்கள் மோடி அவர்களே!

;