politics

img

கேள்வி நேரத்திலிருந்து...

அச்சத்தின் பிடியில் மாணவர்கள்...

பழனி புறநகர் பகுதியான பாலசமுத்திரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மூன்று வகுப்பறைகள் 1930 ஆம் ஆண்டு கட்டப்பட்டதாகும். அந்த ஓட்டுக் கட்டடத்தால் மாணவர்கள் அச்சத்தில் உள்ளனர். எந்த நேரத்திலும் எது வேண்டுமானாலும் நிகழலாம். எனவே, மாணவர்களின் நலனை பாதுகாக்க அந்த கட்டடத்தை அகற்றிவிட்டு புதிய கட்டம் கட்டிக்கொடுக்க வேண்டும் என்றும் திமுக உறுப்பினர் ஐ.பி. செந்தில்குமார் வலியுறுத்தினார். இதற்கு பதில் அளித்த உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி,“துறை அதிகாரிகள் மூலம் ஆய்வு செய்து பழுதடைந்திருந்தால் கண்டிப்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

பழனியில் மினி ஸ்டேடியம்...

பழனி சட்டமன்ற தொகுதியின் தலைமையிடமான பழனி நகராட்சியில் இயங்கி வரும் அரசு மேல்நிலைப் பள்ளி நூற்றாண்டை கடந்திருக்கிறது. இந்த பள்ளியின் மொத்த பரப்பளவு 11.50 ஏக்கர். அரசின் விதிகளின்படி 10 ஏக்கர் நிலம் இருந்தாலே அந்த பள்ளிக்கு மினி ஸ்டேடியம் அமைக்கலாம். எனவே, இந்த பள்ளியில் மினி ஸ்டேடியம் அமைத்து கொடுக்க அரசு முன் வரவேண்டும் என்று  ஐ.பி.செந்தில்குமார் கோரிக்கை விடுத்தார். 

மெரினாவில் மாரத்தான் நிறுத்தம் ஏன்?

கேள்வி நேரத்தின் துணைக் கேள்வி எழுப்பிய திமுக உறுப்பினர்  மா.சுப்பிரமணியன், “இளைஞர்களின் விளையாட்டு திறனை மேம்படுத்த உலகின் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் மாரத்தான்  நடைபெறுகிறது. எல்லா நாடுகளிலும் அந்தந்த நகரின் மிக முக்கி யத்துவம் வாய்ந்த பகுதிகளையொட்டியோ, சுற்றியோ நடத்தப்படு கிறது. சென்னை மெரினா கடற்கரை சாலையில் திமுக ஆட்சி யின்போது மாரத்தான் போட்டிகள் நடத்தப்பட்டன.  ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பிறகு, மாரத்தான் போட்டிகள்  நடத்துவதற்கு அனுமதிக்கப்படவில்லை. 13 கிலோ மீட்டர் நீளமுள்ள  மணற் பரப்பை கொண்ட நமது கடற்கரையின் அழகை வெளி நாட்டவர்களும் ரசிப்பதற்கு ஏதுவாக மாரத்தான் போட்டிக்கு அரசு  அனுமதிக்குமா? என்றார். இதற்கு பதில் அளித்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்  செங்கோட்டையன், “பட்டினப்பாக்கம் பகுதியில் மாரத்தான் ஓட்டங்க ளுக்கு பயிற்சியளிக்கப்படுகிறது. மெரினா கடற்கரையில் நடத்துவ தற்கு அனுமதிப்பது குறித்து முதலமைச்சரின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்படும்” என்றார்.


 

;