சுடுகாட்டு ஊழல் வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்வகணபதிக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனை ரத்து செய்து நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பளித்தார்.
சுடுகாட்டுக்குக் கூரை அமைக்கும் திட்டத்தில் அரசுக்கு ரூ.23 லட்சம் இழப்பு ஏற்படுத்தியதாக சிபிஐ வழக்குப் பதிவு செய்ப்பட்டு 2 ஆண்டு சிறை விதிக்கப்பட்டிருந்தது.
சுடுகாட்டுக் கொட்டகை முறைகேடு வழக்கில் ஐஏஎஸ் அதிகாரிகள் ஆச்சார்யலு, சத்தியமூர்த்திக்கும் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், 2014 சென்னை சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து செல்வகணபதி மேல்முறையீடு செய்திருந்தார்.
மேல்முறையீட்டு வழக்கில் தண்டனையை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பளித்துள்ளார்.
2 ஆண்டு சிறை தண்டனையால் செல்வகணபதியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிபோயிருந்தது குறிப்பிடத்தக்கது.