politics

img

சந்தேகம் சாமிக்கண்ணு

அமெரிக்கா :- இந்தியப் பாதுகாப்புத் துறையுடனான உறவை மேலும் வலுப்படுத்த விருப்பம்.
ச.சா :- ஆயுதங்கள மேலும் இந்தியா தலைல கட்டணும்னு விருப்பமோ..??
 

செய்தி :- ஏர் இந்தியா பங்கு விற்பனையின் குழுத் தலைவராக அமித்ஷா நியமனம்.
ச.சா - எம்.பி. எம்.எல்.ஏ., வியாபாரத்த நல்லா பண்றத வெச்சு போட்டுருப்பாங்களோ..??
 

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்:- மறைமுக வரிகள் தொடர்பாக 7 சட்டங்களில் திருத்தங்கள்.

ச.சா - எப்படி சுத்தினாலும் பெரு நிறுவனங்களுக்கு லாபம்னு முடியுதே..??

 

செய்தி :- பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு மத்திய அரசு கூடுதல் மூலதனம்.
ச.சா - நவீனமயமாக்கலும் அவசியம்னு மத்திய அரசு புரிஞ்சுருக்கா..??