புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண் பேடி :- பொய் சொல்வதே சிலரது வாடிக்கையாகிவிட்டது.
ச.சா - சொந்தக் கட்சிக்காரங்களச் சொல்றாரோ..??
செய்தி :- தில்லி வன்முறை குறித்த ஈரான் கருத்துக்கு இந்தியா கண்டனம்.
ச.சா - ஒவ்வொரு நாடா, இந்தியாவுக்கு எதிரா நிலைபாடு எடுத்துட்டே வருதே..??
அசாம் மாநில பாஜக எம்.எல்.ஏ சுமன் ஹரிபிரியா:- பசுவின் சாணத்தால் கொரோனா வைரசைத் தடுக்க முடியும்.
ச.சா - அடுத்த அறிவியல் துறை அமைச்சரா இவர் ஆனாலும் ஆயிடுவார்..!!
ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் :- தில்லியில் நடந்த வன்முறை பாஜகவின் திட்டமிட்ட சதி.
ச.சா - மோடிய சந்திச்சப்ப கெஜ்ரிவால் இதச் சொன்னாரா..??