கவராட்டி
காந்தி ஜெயந்தியின் 152-வது பிறந்தநாளை முன்னிட்டு லட்சத்தீவில் காந்தி சிலை திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த விழா நடைபெறும் வரவேற்பு நுழைவு வாயில் பகுதியில் பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், லட்சத்தீவு நிர்வாக பொறுப்பாளர் பிரபுல் படேல் ஆகியோரின் புகைப்படங்கள் பெரிதாக டிசைன் செய்யப்பட்டு பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் யாருக்காக சிலை வைக்க நிகழ்ச்சி நடத்தினார்களா அவருடைய படத்தை காணவில்லை. பேனரில் காந்தியின் உருவம் இல்லை. காந்தி முதுகுப்புறமாக திரும்பி நிற்கும் சிறிய அளவு லோகோ மட்டுமே உள்ளது. தேசபக்தியை பற்றி அடிக்கடி பேசும் மோடி அரசின் தேச பக்தி நிலைமை தான் லட்சத்தீவில் அம்பலமாகியுள்ளது.