நிதி ஆயோக் துணைத்தலைவர் ராஜீவ் குமார் :- ரிசர்வ் வங்கியின் வட்டிக்குறைப்பால் பொருளாதாரம் வளரும்.
ச.சா - வளரும்னு சொல்லியே காலத்தை ஓட்டுறீங்களே..?!?
மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் :- 2014 முதல் தற்போது வரையில் 10 கோடி கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன.
ச.சா - ஏற்கனவே இருந்ததுக்கு பெயிண்ட் அடிச்சத சேத்தா இப்புடித்தான் கணக்கு வரும்...!!!
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் :- கடல் பகுதி, விண்வெளி மற்றும் இணைய தளம் ஆகியவை நாட்டின் பாதுகாப்புக்கு சவாலாக இருக்கும்.
ச சா - மக்கள மிரட்டுறதே உங்களோட வேலையா இருக்கே...?!?
மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் :- நேர்மையாக செயல்படுவோர் எதற்கும் கவலைப்பட வேண்டியதில்லை.
ச.சா - அப்புறம் எதுக்கு சம்பந்தமில்லாம தேச விரோத வழக்கு போடுறீங்க..?!?