politics

img

ராஜீவ் ஹாக்கி ஆடவில்லைதான்... மோடி மட்டும் கிரிக்கெட் ஆடினாரா? ஸ்டேடியத்திற்கு எதற்கு அவரது பெயரை சூட்ட வேண்டும்?

மும்பை:
‘ராஜீவ் காந்தி கேல் ரத்னா’ என்ற விருதின் பெயரை, ‘தயான்சந்த் கேல் ரத்னா விருது’ என்றுமாற்றியதற்கு அரசியல் நோக்கமே காரணம்! என்றுசிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத்விமர்சித்துள்ளார். 

இதுதொடர்பாக ‘சாம்னா’ பத்திரிகை தலையங்கத்தில் அவர் எழுதியிருப்பதாவது:

“முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் தியாகத்தை அவமதிக்காமல் ஹாக்கி ஜாம்பவான்மேஜர் தயான் சந்த் கவுரவிக்கப் பட்டிருக்கலாம். தயான் சந்த் பெயரில் புதிதாக ஒரு பெரிய விருதை அறிவித்திருக்கலாம். அப்படிச் செய்திருந்தால் மோடிஅரசை நாம் பாராட்டியிருக்கலாம். மாறாக, வெறுமனே ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருதை மேஜர்தயான் சந்த் கேல் ரத்னா விருதுஎன்று பெயர் மாற்றுவது அரசியல் விளையாட்டு தானே தவிர வேறு எதுவும் இல்லை. பாஜகவினர் சிலர் ‘ராஜீவ் காந்தி எப்போது ஹாக்கி விளையாடினார்?’ என அறிவாளித்தனமாக கேள்வி கேட்கின்றனர். பிரதமர் மோடி மட்டும் கிரிக்கெட்டில் என்ன சாதனை செய்துவிட்டார், என்பதற்கான அகமதாபாத்தில் உள்ள சர்தார் பட்டேல் ஸ்டேடியத்திற்கு அவரது பெயரை வைத் தார்கள்? அதேபோலவே தில்லி கிரிக்கெட் மைதானத்திற்கு அருண் ஜெட்லியின் பெயரை வைத்திருக்கிறார்கள்..? அங்கும் இந்த கேள்வியை கேட்கலாம். சொல்லப்போனால் மக்கள்தான் இந்த கேள்விகளைக் கேட்கிறார்கள்.

ஒன்றிய பாஜக அரசு ராஜீவ்காந்தியின் பெயரை முற்றிலுமாகநீக்குவதன் மூலம் வெறுப்பு அரசியல் செய்கிறது. பழிவாங்கும் மனப்பான்மையுடன் யாராலும் ஒரு அரசை நடத்த முடியாது.தயான் சந்த்தை முந்தைய அரசுகள் மறந்து விட்டதைப் போல ஒரு தோற்றத்தை ஏற்படுத்த முயல்கிறார்கள். 1956-ஆம் ஆண்டில்தயான் சந்திற்கு நாட்டின் மூன்றாவது உயரிய விருதான பத்மபூஷண் விருது வழங்கப்பட்டது. அதேபோல தயான் சந்தின் பிறந்தநாள் ‘தேசிய விளையாட்டு தினமாக’ கொண்டாடப் படுகிறது. அவரது பெயரில் தேசிய விருதுகளும் வழங்கப்படுகின்றன. மேஜர் தயான் சந்த் பண்டிட் நேருவுடன் நெருங்கிய உறவைக் கொண்டிருந்தார். இவ்வாறு சஞ்சய் ராவத் குறிப்பிட்டுள்ளார்.