ஆலப்புழா:
‘வழிபாட்டுத் தலங்கள் வன்முறைக் களங்களாக மாறுவதைஅனுமதிக்க முடியாது’ என்றுஆர்எஸ்எஸ் கூட்டத்தினரை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநில பொறுப்புச் செயலாளர் ஏ. விஜயராகவன் எச்சரித்துள்ளார்.
வள்ளிகுந்நத்தில் ஆர்எஸ்எஸ்காரர்களால் கொல்லப்பட்ட 15 வயது எஸ்எப்ஐமாணவன் அபிமன்யு-வின் இல்லத்திற்கு ஏ. விஜயராகவன் வருகை தந்தார். இங்கு அபிமன்யுவின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்த அவர் பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது, ‘வன்முறைச் செயல்கள் மூலம் சமூகத்தில் தனது இருப்பை ஆர்எஸ்எஸ் நிலைநாட்ட முயற்சிக்கிறது. நாட்டில் அமைதியை விரும்புவோர் ஆர்எஸ்எஸ்-ஸை தனிமைப்படுத்த வேண்டும். நாட் டில் அமைதியை நிலைநாட்ட சிபிஎம் முன்முயற்சி எடுத்துவருகிறது. அந்த வகையிலேயே வன்முறையாளர்களின் அரசியலை தனிமைப்படுத்த சிபிஎம் முயன்றது. இந்த கொலைக்கு பின்னால் ஆர்எஸ்எஸ் இல்லை என்று அவர்கள் கூறினாலும், பகுதி மக்களுக்கு உண்மைகள் தெரியும்’ என்று விஜயராகவன் கூறினார்.
மேலும், ‘மத்திய அமைச்சராக இருந்துகொண்டு வி. முரளீதரன் வெளியிடும் அனைத்து அறிக்கைகளும் அவரது செயல்களும் தரமற்றவை. முதல்வருக்கு எதிராக பயன் படுத்திய வார்த்தைகளை மாற்றிக்கொள்ள வி. முரளீதரன் தயாராக இல்லை என்பதுஆபத்தானது. இப்படிப்பட்டவர் அமைச்சர் பதவியை வகிப்பது பொருத்தமற்றது’ என்றும் அவர் சாடினார்.