politics

img

தமிழக வாக்காளர்களுக்கு ஒரே கல்லில் இரண்டு மாங்காய்

தமிழக வாக்காளர்களுக்கு ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. பெரிய தம்பி மோடியையும் சின்னத்தம்பிகள் இபிஎஸ் - ஓபிஎஸ்சையும் வீழ்த்துவதே அந்த வாய்ப்பு. 



பொள்ளாச்சி தேங்காயும், பொள்ளாச்சி சந்தையும் இந்திய அளவில் சிறப்பு பெற்றது. ஆனால், இன்று அந்த சிறப்புக்கு இங்கு நடந்த பாலியல் வன்கொடுமைகள் களங்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. நூற்றுக்கணக்கான பெண்களை பாலியல் வன்கொடுமைகளுக்கு உட்படுத்தியவர்களுக்கு அதிமுகவினர் உதவுவதால் காவல்துறை அவர்களை பாதுகாக்க துணைபோகிறது. புகார் அளித்த பெண்ணை அவமதிக்கும் வகையில் அவரது பெயரை தெரிவிக்கும் தைரியம் வந்தது. அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமன் குற்றவாளிகளுக்கு உதவுவது கேவலமான செயல். அவர் இந்த ஊருக்கு நல்லது செய்வதென்றால் அவரது பெயருக்கு முன்னால் உள்ள பொள்ளாச்சியை நீக்க வேண்டும். மோடி ஆட்சியில் ஒரு மணி நேரத்துக்கு 4 பெண்கள் அல்லது குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகிறார்கள். நாடு முழுவதும் நடக்கும் இத்தகு கொடுமைகளை செய்தவர்களில் 80 சதவீதம் குற்றவாளிகள் தப்பித்துவிடுகின்றனர். அவர்களுக்கு எம்பிக்களும், எம்எல்ஏக்களும் துணைபோவதே அதற்கு காரணம். காஷ்மீர் மாநிலம் கத்துவாவில் 4 வயது சிறுமியை பலநாட்கள் அடைத்துவைத்து பாலியல் வல்லுறவு செய்து கொன்ற கொடும் குற்றவாளிகளுக்கு ஆதரவாக பாஜக தலைவர்கள் இருந்ததை பார்த்தோம். பாலியல் வன்குற்றங்களில் பாஜகவினர் ஏராளமாக சிக்கியுள்ளனர்.இத்தகைய பாலியல் குற்றவாளிகள்தான் இங்கே கைகோர்த்து ஓட்டு கேட்டு வருகிறார்கள்.


பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கு.சண்முகசுந்தரத்தை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் ஆற்றிய உரையிலிருந்து...