தடுப்பூசிகளை மத்திய அரசாங்கம் கொள்முதல் செய்துமாநிலங்களுக்கு விநியோகிக்க வேண்டும் எனவும் அதற்காகஒன்றுபட்ட குரல் தரவேண்டும் எனவும் 11 மாநில முதல்வர் களுக்கு கேரள முதல்வர் கடிதம் எழுதியுள்ளார். இது மிக நியாயமான கோரிக்கை. இவ்வாறு செய்வது மூலம் மட்டும்தான் இந்த பெருந்தொற்றை தடுக்க இயலும். மோடி அரசாங்கம் இந்தகோரிக்கையை ஏற்க வேண்டும். நமது மக்களின் உயிரை பாதுகாக்க இந்த முக்கிய கோரிக்கையை அமலாக்க மாநில அரசாங்கங்கள் ஒன்றுபட்டு இந்த பிரச்சனையை முன்னெடுக்க வேண்டும். மத்திய அரசாங்கத்தை வற்புறுத்த வேண்டும்.
*****************
2020-21ம் நிதியாண்டில் மட்டும் பெட்ரோலிய பொருட்கள் மீது அதிக வரிகள் போட்டதன் மூலம் மத்திய அரசாங்கம் கூடுதலாக 1,87,000 கோடி ரூபாய் வருமானம் பெற்றது. மக்கள் பணத்தை இந்த வரிகள் மூலம் சூறை! மேலும் கிட்டத்தட்ட ரூ 1 லட்சம் கோடி ரிசர்வ் வங்கியிடமிருந்து உறிஞ்சப்பட்டது. இந்த நிதியெல்லாம் எங்கே செல்கிறது? இன்னல்படும் மக்களுக்கு நிதி உதவி இல்லை; வேலை இழந்தோருக்கு நிவாரணம் இல்லை; தடுப்பூசி வாங்க பணம் இல்லை; மருந்துகளும் சிகிச்சையும் அனைவருக்கும் இலவசமாக இல்லை. மோடியின் பிம்பம் கட்டமைக்கவும் பொய்பிரச்சாரத்துக்கும் வாய்ப்பந்தலுக்கும்தான் அதிகமாக செலவிடப்படுகிறது. கிரிமினல் குற்றம்!
*****************
2019ம் ஆண்டைவிட 2020ம் ஆண்டு EPF பணத்தை எடுப்பவர்களின் எண்ணிக்கை 54.42 லட்சத்திலிருந்து 1.27 கோடியாகஉயர்ந்துள்ளது. பெருந்தொற்று காலத்தில் வாழ்வது மிகக்கடினமாக மாறியுள்ளதால் மக்கள் தமது சேமிப்பை எடுக்க வேண்டியநிர்ப்பந்தம் உருவாகியுள்ளது. மக்களுக்கு சிறிதாவது நிவாரணம்அளிக்க வருமான வரி வரம்புக்கு வெளியே இருப்பவர்களுக்கு மாதம் ரூ 7500 நிதி உதவி தாருங்கள்.
*****************
2019ம் ஆண்டைவிட 2020ம் ஆண்டு 40%குடும்பங்கள் கூடுதலாக கிராமப்புற வேலை உறுதித்திட்ட (MNREGA) பணிக்காக பதிவு செய்துள்ளனர். இது கிராமப்புறங்களில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடியை வெளிப்படுத்துகிறது. MNREGAவுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யுங்கள்; ஊதியத்தை அதிகரியுங்கள்; கூடுதல் குடும்பங்களுக்கு வேலை தாருங்கள். கிரமப்புற மக்கள் நிவாரணம் பெறுவதுமட்டுமல்ல; இந்த பணி மூலம் உள்கட்டமைப்பு வசதிகளையும் உருவாக்குங்கள்.
*****************
சென்ற ஆண்டு 29 லட்சம் வேலை வாய்ப்புகள் பறிபோயின. இந்த ஆண்டு கூடுதலாக 17 லட்சம் பறிபோயுள்ளன. மேலும் முறைச்சாரா தொழில்களும் தின ஊதியம் ஈட்டுவோரின் வருமானமும் அழிந்துள்ளன. வேலை இழந்தஅனைவருக்கும் வேலையில்லா நிவாரணம் மாதம் ரூ.6000 தாருங்கள்.
*****************
பங்கு சந்தையில் இந்திய நிறுவனங்கள் கோவிட் 19 காலத்தில் 3,98,25,000 கோடி லாபம் ஈட்டியுள்ளனர் எனபிசினஸ் ஸ்டாண்டர்டு இதழ் கூறுகிறது. பிரிட்டஷ் ஆட்சி: தமது நாட்டில் தொழில் புரட்சிக்காக இந்தியா வை பகற்கொள்ளை அடித்தனர். பொருளாதாரம்/விவசாயம் அழிந்தது. ஆட்சியாளர் தவறுகளால் கடும் பஞ்சம். 1918-20 காலகட்டத்தில் ஸ்பானிஷ் பெருந்தொற்றை தவறாக கையாண்டதான் காரணமாக ஒரு கோடிக்கும் அதிகமான இந்தியர்கள் மரணம்.
மோடி ஆட்சி: தேசிய வளங்கள் பகற் கொள்ளை. தறிகெட்ட தனியார் மயம். விவசாய விரோத வேளாண் சட்டங்கள். வேலையின்மை. வறுமை. பட்டினி. ஆனால் கூட்டுக் களவாணி முதலாளிகள் பெரும் லாபம். அதிலிருந்து அரசியல் நன்கொடை நிதி.கோவிட் பெருந்தொற்றை தவறாக கையாண்டதால் மரணத்தின்கோர தாண்டவம்.
*****************
ஒவ்வொரு மாதமும் தனது கீறல் விழுந்த ரிக்கார்டு போன்றஉரையில் மோடி தனது ஆட்சியின் கீழ் கடந்த 7 ஆண்டுகளாக அரசாங்கம் சரியான பாதையில் செல்வதாகவும் பெருந்தொற்றுக்கு எதிராக செயல்படுவது என தீர்மானமாக இருப்பதாகவும் பேசினார். அதன் உண்மை என்ன? அமெரிக்காவில்/பிரேசிலில் தொற்றுஉச்சத்தில் இருந்த பொழுது ஏற்பட்ட தொற்று எண்ணிக்கை மற்றும் மரணங்களைவிட இந்தியாவில் மே மாதத்தில் மிக அதிகம். இதுதான் இந்த அரசாங்கம் தொற்றை எதிர்கொண்ட லட்சணம்.
*****************
மற்றொரு வரலாறு காணாத வீழ்ச்சி. நகர்ப்புற வேலையின்மை 18% ஆக உயர்வு. கோடிக்கணக்கான வாழ்வாதாரங்கள் அழிக்கப்பட்டன. இந்த கொடுமை மாறும் சூழல் கண்ணில்படவே இல்லை. வேலையிழந்தவர்களுக்கு நிவாரணமாக ரூ6000 கொடுங்கள். மக்கள் உயிர்வாழ மட்டுமல்ல; இந்த பணம் செலவு செய்யப்பட்டால் பொருளாதாரமும் மீட்சி பெற தொடங்கும்.
*****************
இந்தியாவின் ஜி.டி.பி. மைனஸ் 7.3% ஆக வீழ்ச்சி! சார்க்நாடுகளிலேயே இதுதான் மோசமான சரிவு. பங்களாதேஷ் 6.1% வளர்ச்சி; பாகிஸ்தான் 3.9% வளர்ச்சி; நேபாளம் மைனஸ்0.13%; இலங்கை மைனஸ் 3.6%. மோடியின் 7 ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம் மோசமானசிதைவு! இதனை தடுக்காவிட்டால் பொருளாதாரம் முற்றிலும்சீர்குலைந்து தேசமும் மக்களும் அழிவுப்பாதையில் தள்ளப்படுவதை மோடி உத்தரவாதம் செய்துவிடுவார்.
*****************
விடுதலைக்கு பின் இதுவரை இல்லாத வரலாறு காணாத பொருளாதார வீழ்ச்சி. உற்பத்தி பொருட்களுக்கான தேவைஉள்நாட்டில் இருப்பதன் மூலம் மட்டும்தான் மீட்சி தொடங்க இயலும். நேரடி நிதி உதவி/வேலைவாய்ப்புகளை உருவாக்கும் பொது முதலீடுகள்/கிராமப்புற வேலை விரிவாக்கம்/ உள்கட்டமைப்பு வசதிகள் அதிகப்படுத்துதல் ஆகியவை உடனே தேவை.ஆனால் “மோடி மாடல் பொருளாதாரம்” என்பது கூட்டுக் களவாணிகளுக்காக தேசத்தின் செல்வத்தை கொள்ளை அடிப்பதாகவே உள்ளது.
*****************
இந்த பெருந்தொற்று காலத்தில் 9346 குழந்தைகள் ஒருபெற்றோரையோ அல்லது இரு பெற்றோரையோ இழந்துள்ளனர். சிலர் குடும்பத்தால் கைவிடப்பட்டுள்ளனர். நமது காலத்தின்இதயத்தை பிழியும் சோகம் இது. மோடி அரசாங்கம் அறிவியல்பூர்வமான அறிவுரைகளை கேட்டுபல மாதங்களை வீணாக்காமல் இருந்திருந்தால் இதனை தடுத்திருக்க முடியும். நவதோயா வித்யாலாயா போன்ற அரசு பள்ளிகளில் இந்த குழந்தைகளின் கல்வியை உத்தரவாதம் செய்யவும் அவர்களுக்கு வேலை கிடைக்கும் வரை வாழ்வாதரத்தை உத்தரவாதம் செய்யவும் அரசாங்கம் முன்வரவேண்டும்.
*****************
8 வயதுடைய அனைவருக்கும் டிசம்பர் 2021க்குள் தடுப்பூசி போட்டு விடுவதாக மத்திய அரசாங்கம் உச்சநீதிமன்றத்தில் வாக்குறுதி அளித்துள்ளது. இதற்கு ஜூன் மாதத்திலிருந்து ஒரு மாதத்துக்கு 23.8 கோடி தடுப்பூசிகள் தேவை. போர்க்கால அடிப்படையில் கொள்முதல் செய்யுங்கள். அனைவருக்கும் இலவச தடுப்பூசி திட்டத்தை உடனடியாக செயலாற்றுங்கள்.
*****************
2021 மே மாதத்தில் மட்டும் 1.53 கோடி பேர் வேலைஇழந்துள்ளனர். வேலையின்மை என்பது அன்றாட செய்தியாகிவிட்டது. வாழ்வாதரங்களை அழித்து கொண்டுள்ளது. வேலை இழப்பு - உற்பத்தி பொருட்களின் தேவைவீழ்ச்சி எனும் விஷ வட்டத்தை உடைக்க ஒரே வழி வருமான வரம்புக்குள் இல்லாத குடும்பங்களுக்கு மாதம் ரூ 7500 நேரடி நிதி தருவதுதான்!
*****************
2004-14 ஆண்டு காலத்டைவிட கடந்த 7 ஆண்டுகளில் வங்கி முறைகேடுகள் எண்ணிக்கை/நிதி இழப்பு இரண்டுமே 100% அதிகரித்துள்ளது. கடந்த 7 ஆண்டுகளில் ரூ 11,43,354 கோடி வாராக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்கம் நாடாளுமன்றத்திலும் தகவல்அறியும் சட்டத்திலும் கூறியுள்ளது. இந்த தொகை பெருந்தொற்று காலத்தில் மருந்துகள்/ ஆக்சிஜன்/ தடுப்பூசிகள் வாங்க போதுமானவை!இந்தியாவின் செல்வம் பகற்கொள்ளை. மிக மோசமான கூட்டுக்களவாணி முதலாளித்துவம். தனது கூட்டு கள்ள முதலாளிகளுக்கான மோடியின் கொள்கைகள்- கடனை வாங்கு; வெளி நாட்டுக்கு பறந்துவிடு!
*****************
எந்த பொது சொத்தை கள்ள கூட்டு களவாணிகள் கொள்ளையடிக்க வழிவகை செய்யலாம் என மோடி அரசாங்கம் கண்கொத்தி பாம்பாக பார்த்துகொண்டிருக்கிறது. இப்பொழுது அவர்களது இலக்கு ரயில்வே மைதானங்கள். சென்னை உட்பட 15 மைதானங்கள் இப்பொழுது தனியார் கைகளில் தரமுனைப்பு. இரக்கமற்ற வகையில் பொது சொத்துக்கள் கொள்ளை;ஆனால் கடந்த 7 ஆண்டுகளில் உருப்படியான எந்த தேசிய சொத்தும் உருவாக்கப்படவில்லை.
*****************
1943ம் ஆண்டு வங்க பஞ்சத்தின் பொழுது தோழர் முசாபர் அகமது அவர்களால் உருவாக்கப்பட்ட “மக்கள் நிவாரண குழு” தொடர்ந்து புத்தாக்கம் பெற்று கோவிட் இரண்டாவது காலத்திலும் மக்கள் பணியில் ஈடுபட்டு வருகிறது.
செங்கொடி-மக்களுடன்மக்களுக்காக...