2024 மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் கட்சி இன்று வெளியிட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜூன கார்கே ஆகியோர் தில்லியில் இன்று வெளியிட்டனர்.
காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் உள்ள சில முக்கிய அம்சங்கள்:
1. சமூக, பொருளாதார மற்றும் சாதிவாரி கணக்கெடுப்பு நாடு முழுவதும் நடத்தப்படும்.
2. NEET, CUET போன்ற தேர்வுகளை மாநில அரசுகள் விருப்பப்பட்டால் நடத்திக் கொள்ளலாம்.
3. பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு வழங்கப்படும் 10% இடஒதுக்கீடு அனைத்து சாதியினருக்கும் விரிவாக்கம் செய்யப்படும்.
4. ஒவ்வொரு குடிமகனைப் போலவே, சிறுபான்மையினருக்கும் உடை, உணவு, மொழி மற்றும் தனிப்பட்ட சட்டங்களைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் இருப்பதை உறுதி செய்யப்படும்.
5. கல்வி நிலையங்களில் பட்டியலின மக்கள் துன்புறுத்தலை தடுக்கும் வகையில் ரோகித் வெமுலா சட்டம் இயற்றப்படும்.
6. தேசிய கல்வி கொள்கை மாநில அரசுகளின் ஆலோசனைகளுக்கு பிறகே நடைமுறைப்படுத்தப்படும்.
7. அரசுத் தேர்வுக்கான விண்ணப்ப கட்டணம் ரத்து செய்யப்படும்.
8. 10 ஆண்டுகளில் எவ்வித விவாதமும் இன்றி நாடாளுமன்றத்தில் பாஜக அரசு நிறைவேற்றிய சட்டங்களை ஆய்வு செய்து மாற்றங்கள் செய்யப்படும்.
9. பாஜகவில் சேர்ந்து குற்ற வழக்கில் இருந்து தப்பித்தவர்கள் மீண்டும் விசாரிக்கப்படுவார்கள்.
10. ரயில்களில் ரத்து செய்யப்பட்ட மூத்த குடிமக்களுக்கு கட்டண சலுகை மீண்டும் கொண்டுவரப்படும்.
11. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் (EVM) செயல்திறன் மற்றும் வாக்குச்சீட்டின் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றை இணைக்கும் வகையில் தேர்தல் சட்டங்கள் திருத்தம்.
12. ஜம்மு-காஷ்மீருக்கும், புதுச்சேரிக்கும் மாநில அந்தஸ்து வழங்கப்படும்.
13. பி.எம் கேர்ஸ் திட்டத்தில் நடந்த முறைகேடுகள் விசாரணை செய்யப்படும்.
14. மனித கழிவுகளை மனிதர்களே அகற்றும் முறை முற்றிலுமாக ஒழிக்கப்படும்.
15. பணியில் இருக்கும்போது தூய்மை பணியாளர்கள் உயிரிழந்தால் இழப்பீடாக ரூ.30 லட்சம் வழங்கப்படும்.
16. அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் ஒப்பந்த பணி முறை நீக்கப்படும்.
17. நூறுநாள் வேலைத்திட்ட ஊதியம் ரூ.400 ஆக அதிகரிக்கப்படும்.
18. ராணுவ சேர்க்கைக்கான அக்னிபாத் திட்டம் ரத்து செய்யப்படும்.
19. 2025-ஆம் ஆண்டு முதல் ஒன்றிய அரசின் வேலை வாய்ப்புகளில் பெண்களுக்கு 50 சதவிகித வேலைவாய்ப்பு வழங்கப்படும்.
20. தனிமனித சுதந்திரம் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
21. ஜி.எஸ்.டி சட்டங்களில் மாற்றம் கொண்டுவரப்படும்.