politics

img

சந்தேகம் சாமிக்கண்ணு

மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் :- மாணவர்களைத் தூண்டி விடாதீர்கள்.
ச.சா - வன்முறை வெறியாட்டம் ஆடுனது உங்க அமைப்பு... நீங்கதான தூண்டி விட்டுருக்கணும்..!!
----------
தமிழக அமைச்சர் உதயகுமார்:- குடியுரிமை திருத்த சட்டத்தால் சிறுபான்மை மக்களுக்குப் பாதிப்பில்லை.
ச.சா - எல்லாருக்கும்தான் பாதிப்புனு சொல்ல வர்றாரா..??
--------
முதல்வர் எடப்பாடி பழனிசாமி :- அணையைத் தூர் வருவதால் எந்த ஆபத்தும் இல்லை.
ச.சா - அணையைப் பாதுகாக்கலைனா ஆபத்துனா தெரியுமில்லையா...?
--------
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் :- ஒழுங்காக வரி செலுத்தாதவர்களை துன்புறுத்த மாட்டோம்.
ச.சா - சிவப்பு கம்பளம் விரிப்பீங்கன்னு எல்லாருக்கும்தான் தெரியுமே..??