politics

img

ரூபாய் நோட்டின் நிறத்தை மாற்றியதுதான் மோடியின் சாதனை

கஜா புயல் தமிழகத்தை தாக்கியபோது ஓபிஎஸ்-இபிஎஸ் ஆகியோரின் “டாடி”யான மோடி உலகம் சுற்றும் வாலிபனாக உலகைச் சுற்றி வந்தார். தமிழகத்திற்கே வரவில்லை.


* அரசியல் சட்டத்தைப் பாதுகாக்க மதச்சார்பற்ற அணிகள் ஒரு பக்கம் நிற்கின்றன. அரசியல் சட்டத்தை சிதைக்கக் கூடியவர்கள் மற்றொரு புறத்தில் நிற்கின்றனர். 


*மதச் சார்பின்மையை பாதுகாப்பவர்கள் ஒரு புறமும், பாசிச வெறிபிடித்த கும்பல் மற்றொரு புறத்திலும் நிற்கிறது.


*இந்தியாவைப் பாதுகாக்க, தமிழகத்தைப் பாதுகாக்க, பாசிச கும்பலைத் தோற்கடிக்க மதச்சார்பற்ற அணிகள் ஓரணியில் திரண்டுள்ளன.


*இந்தியா ஒரு ஏழ்மையான நாடு, 90 சதவீத மக்கள் ரூ.10 ஆயிரத்திற்கும் குறைவாக சம்பளம் பெற்றுவருகின்றனர்.


*விவசாயத்தை நம்பியுள்ள நாடு இந்தியா. விவசாயம் இல்லையென்றால் நாடே அழிந்துவிடும். விவசாயிகளை மோடி அரசு கண்டுகொள்ளவில்லை. பாஜக ஆட்சியில் ஆண்டிற்கு 10 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். பெருமுதலாளிகளின் சுரண்டலுக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.


*100 நாள் வேலை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி-1 அரசில் கொண்டுவரப்பட்டது. இந்த அரசில் இடதுசாரி கட்சிகளும். திமுக-வும் இடம் பெற்றிருந்தன. அது மட்டுமல்ல மலைவாழ் மக்கள், பழங்குடி மக்கள், தலித்துகள் ஆகியோரைப் பாதுகாக்க சட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால், பாஜக ஆட்சியில் 100 நாள் வேலைக்கான மானியம் வெட்டிச் சுருக்கப்பட்டுவிட்டது.


*ஐந்தாண்டில் ஏழை-பணக்காரர்களுக்கான இடைவெளி அதிகரித்துள்ளது. 73 சதவீத சொத்துக்களை ஒரு சதவீத பணக்காரர்கள் வைத்துள்ளனர். இந்த அரசு கார்ப்பரேட்டுகளுக்கான அரசாகவே இருந்துள்ளது. ஆனால் விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய பணமில்லை என்கிறது.


*தலித் மக்களுக்கான திட்டங்களையும் மோடி அரசு ஒழித்துவிட்டது. ஐந்தாண்டில் அவர்களுக்கென ஒதுக்கப்பட்டிருந்த இரண்டு லட்சம் கோடி ரூபாயை மடைமாற்றிவிட்டது. இதற்கெதிராகப் போராடியவர்கள் சிறையிலடைக்கப்பட்டனர்.


*பணமதிப்பு நீக்கத்தில் ரூபாய் நோட்டின் நிறத்தை மாற்றியது தான் சாதனை. ஜி.எஸ்.டி.-யால் சிறு, குறு தொழில்கள் பாதிக்கப்பட்டு, 5 கோடி வணிகர்கள் பாதிக்கப்பட்டனர். இது தான் பிரதமர் நாட்டிற்கு கொடுத்த பரிசு. 


*கத்துவாவில் ஒரு சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். அந்த சம்பவத்தில் பாஜக தலைவர்கள் வீதியில் இறங்கி சிறுமிக்காகப் போராடவில்லை. குற்றவாளிகளுக்காகப் போராடினார்கள். இது குறித்து பிரதமர் மோடி ஒரு வார்த்தை கூட கூறவில்லை. 


*பெண்கள், தலித்துகள், ஏழை மக்களுக்கு எதிராக எது நடந்தாலும் பிரதமர் அமைதியாக தான் இருப்பார். அதே வழியை தான் தமிழகத்தில் முதல்வர் மற்றும் துணை முதல்வர் கடைப்பிடித்து வருகின்றனர்.


*பொள்ளாச்சியில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமை சம்பவம் வெட்கக்கேடானது. மோசமானது. இதில் தொடர்புடைய குற்றவாளிகளை தமிழக அரசு பாதுகாக்கிறது.


மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில் மதுரை தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து யா.ஒத்தக்கடையில் நடைபெற்ற கூட்டத்தில் சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் பேசியதில் இருந்து...