பாஜகவிடமிருந்து நாட்டை மீட்க ஒரு வாய்ப்பு...
“இந்தியாவின் பன் முகத்தன்மைக்கு பாதிப்பு ஏற்பட்டால் தேசிய நலன் பாதிக் கும். அந்த வகையில், இந்தியாவின் கூட் டாட்சித் தத்துவத்துக்கு பாஜகவால் ஏற்பட் டள்ள பாதிப்பில் இருந்து நாட்டை மீட்க, ஐந்து மாநில பேரவைத் தோ்தல்கள் ஒரு வாய்ப்பாக இருக்கும்” என்று காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவா் ஆனந்த்வர்மா கூறியுள்ளார்.
**************
தேஷ்முக் ராஜினாமா; திலீப் வல்சேவுக்கு பதவி!
மாதந்தோறும் ரூ.100 கோடி மாமூல்வசூலித்துத் தர வேண்டும் என உத்தரவிட்டதாக எழுந்த குற்றச்சாட்டில், மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் மீது,மும்பை உயர் நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது. இதையடுத்து, தேஷ்முக் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இந்நிலையில், தேஷ்முக்கிற்குப் பதில்,புதிய உள்துறை அமைச்சராக தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் திலீப் வல்சே பாட்டீல் நியமிக்கப்பட்டுள்ளார்.
**************
உளவுத்துறை தோல்வி இல்லையெனில் வேறென்ன?
சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலுக்கு, உளவுத்துறையின் தோல்வி காரணமில்லை என்றால், வேறு என்ன காரணம்? என்று மத்திய அரசுக்கு ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். “21-ஆம் நூற்றாண்டில் எந்த ஒரு இந்திய வீரரும் கவச உடை இல்லாமல் எதிரியை எதிர்கொள்ளக்கூடாது. கவச உடைகள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும்; நமது வீரர்கள் குண்டுகளுக்கு இரையாக வேண்டியதில்லை” என்றும் டுவிட்டரில் அவர் பதிவிட்டுள்ளார்.
**************
ஷீரடி சாய்பாபா கோவில் மூடல்!
மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா தொற்றுப் பரவல் மீண்டும் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, அங்கு இரவுநேர பொதுமுடக்கத்தை முதல்வர் உத்தவ் தாக் கரே அறிவித்துள்ளார். இதனிடையே, அகமது நகர் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஷீரடி சாய்பாபா கோவிலும்திங்கட்கிழமை முதல் மூடப்பட்டுள்ளது. கோவிலின் பக்தர்கள் தங்குமிடம் மற் றும் அன்னதானக் கூடமும் மூடப்பட்டு உள்ளது.
**************
பாஜகவை எதிர்கொள்ள ஒற்றைக்கால் போதும்...
பாஜகவினர் குழாயில் இருந்து வரும்தண்ணீரைப் போலபணத்தை வாரி இறைக்கின்றனர். தங்கமான வங்கம் (சோனார் பெங்கால்) என்று முழக்கமிடுகின்றனர். ஆனால் அதனைக் கூட சரியாக உச்சரிக்க முடியவில்லை. இவர்களால் மேற்கு வங்கத்தைஆட்சி செய்ய முடியாது. மேற்கு வங்கத்தேர்தலில் நான் ஒரு காலுடன் வெற்றி பெறுவேன். வரும் காலங்களில் தலைநகர் தில்லியை நோக்கி இரண்டு கால்களில் வீறு நடை போடுவேன்” என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிகூறியுள்ளார்.