politics

img

பொதுச் செயலாளர் மேசையிலிருந்து...

விவசாயிகளின் போராட்டத்துக்கு பின்னால் எதிர்கட்சிகள் உள்ளன எனும் மோடியின் குற்றச்சாட்டு ஆதாரமற்றது. துளி கூட உண்மை இல்லை. ஒரு அரசியல் தலைவர் கூட எதிர்ப்பு இயக்கத்தில் இணையுமாறுஅழைக்கப்படவில்லை.  வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுங்கள். இந்த சட்டத்தால் பாதிக்கப்படக்கூடிய விவசாயிகள் உட்பட அனைவரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்துங்கள். தேவை எனில் உங்கள் கார்ப்பரேட்நண்பர்களையும் அழையுங்கள். விவசாயத்தில் தேவையான சீர்திருத்தங்கள் குறித்து கலந்தாலோசனை செய்யுங்கள். அதற்குப் பிறகு புதிய சட்டங்களை கொண்டு வாருங்கள். விவசாயம் என்பது மாநில அரசாங்கத்தின் அதிகார வரம்பில் உள்ளது. புதிய வேளாண் சட்டங்கள் இயற்றப்படுவதற்கு முன்பு 
மாநில அரசாங்கங்கள் கலந்தாலோசிக்கப்பட்டனவா? இந்திய விவசாயத்தின்நலனுக்காகவும் தேசத்தின் நலனுக்காகவும் உடனே இந்த வேளாண் சட்டங்களை திரும்ப பெறுங்கள். 

                                           ****************

2014ம் ஆண்டுடன் ஒப்பிடும்பொழுது சுங்கத்தீர்வை (Excise Duty) பெட்ரோல் மீது 348%ம் டீசல் மீது 894%ம் 2020ல் உயர்ந்துள்ளது. இதுதான் மோடியின் புதிய இந்தியா. இப்பொழுது சமையல் எரிவாயுவின் விலையும் ரூ.100 அளவிற்கு உயர்த்தப்பட்டுள்ளது. மக்களின் வாழ்வாதாரம்மீது கொடுமையான கிரிமினல் தாக்குதல் இது. கோவிட் பெருந் தொற்றுக்குமுன்பே இந்தியாவின் பொருளாதாரம் தேக்கத்தில்! பெருந்தொற்று காலத்தில்பொருளாதாரம் மேலும் அதல பாதாளத்தில்! இந்த சூழலில் கூட மக்கள் மீது கூடுதல் சுமைகளையும் துன்பங்களையும் சுமத்திட பிரதமர் மோடி சற்றும் கவலைப்படவில்லை. எனவேதான் மாதம் ரூ.7500 நேரடி நிதி உதவியும் ஒவ்வொரு நபருக்கும் 10 கிலோ உணவு தானியங்களும் தரப்படவேண்டும் என்பதை மீண்டும் வலியுறுத்துகிறோம். மேலும், புதிய நாடாளுமன்றக் கட்டிடம் மற்றும் பிரதமருக்கு சொகுசு பங்களா உள்ளடக்கிய சென்ட்ரல் விஸ்டா திட்டம் உடனடியாக திரும்பப் பெறப்பட வேண்டும். அந்த திட்டத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியை ஏழை மக்களுக்கு இலவச உணவும் நிதி உதவியும் தருவதற்கு பயன்படுத்த வேண்டும்.

                                           ****************

தேர்தல் பிரச்சாரம் செய்யவும் பேரணிகள் நடத்தவும் பெரும் தொற்று பெரிய பிரச்சனையாக பாஜகவுக்கு இல்லை. ஆனால் அதே கொரோனாவைக் காரணம் காட்டி குளிர்கால நாடாளுமன்றத் தொடர் முழுவதையும் மோடி அரசாங்கம் ரத்து செய்துவிட்டது. இது மிகவும் ஆபத்தான போக்கு. ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.

                                           ****************

ஆப்பிள் அலைபேசி நிறுவனத்தின் துணை உற்பத்தி நிறுவனமான பெங்களூர் விஸ்ட்ரான் தொழிலாளர்கள் மீது நடத்தப்படும் காவல்துறை தாக்குதல்களை வன்மையாக கண்டிக்கிறோம். அந்நிய முதலீட்டை ஈர்ப்பதற்கு தொழிலாளி விரோத நடவடிக்கைகள் எடுப்பதை மோடி அரசாங்கம் நிறுத்த வேண்டும். ஆப்பிள் நிறுவனமே தனது துணை நிறுவனம் தொழிலாளர்கள் பிரச்சனையில் நெறிமுறைகளை மீறி இருக்கிறது என கண்டுபிடித்துள்ளது. ஆனால் மோடி அரசாங்கம் அந்த நிர்வாகத்திற்கு ஆதரவாக தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்துகிறது.

                                           ****************
மேற்குவங்கம் கிழக்கு மேதினிபூர் மாவட்டத்தில் உள்ள கெஜூரி எனும் பகுதி ஒரு காலத்தில் திரிணாமுல் காங்கிரசின் பயங்கரவாத செயல்களுக்கு புவி மையமாக இருந்தது. இன்று அங்கு மீண்டும் செங்கொடி இயக்கம் எழுகிறது. தில்லி விவசாயிகளுக்கு ஆதரவாக பூத் மட்டத்தில் ஊர்வலம் நடத்தியுள்ளது.

                                           ****************

மோடி அரசாங்கத்தின் வேளாண் சட்டங்களை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்ற திட்டமிடப்பட்ட சட்டமன்றக் கூட்டத்திற்கு கேரளா ஆளுநர் முகம்மது ஆரிப்கான் மறுப்பு தெரிவித்தார். மோடியின் கைப்பாவையாக  ஆளுநர் உள்ளார். இது ஜனநாயக விரோத செயல். மோடி அரசாங்கத்திற்கு அரசியல் சட்டம் என்ற ஒன்று இருக்கிறதா என்பதே மிகப்பெரிய கேள்வியாக எழுந்துள்ளது.

+++++++++++++++++

தோழர் சீத்தாராம் யெச்சூரி  அவர்களின் கூடுதல் கருத்துக்களை காண கீழ் காணும் லிங்க்-கை கிளிக் செய்யவும்....

முகநூல் : https://www.facebook.com/ComradeSRY/

டுவிட்டர் : https://twitter.com/SitaramYechury

;