மும்பை:
மத்திய அரசு கொண்டு வந் துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (CAA)எதிராக சிற்றூராட்சி ஒன்று தீர்மானம் நிறைவேற்றி, ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் அகமதுநகர் அருகே அமைந்துள்ளது இஸ்லாக் கிராமம் ஆகும். இங்குதான், ஜனவரி 26-ஆம் தேதி நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் சிஏஏ, என்பிஆர், என்ஆர்சி ஆகியவற்றுக்கு எதிராக கிராம மக்கள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். இதுகுறித்த ஆவணத்தில் ஊராட்சித் தலைவர், ஊராட்சித் துணைத்தலைவர் ஆகியோர் கையொப்பம்இட்டு மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். நடுத்தர மற்றும் சிறு விவசாயிகள் அதிகம் வசிக்கும் இங்கு ஒரு முஸ்லிம் குடும்பம் கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.இதுதொடர்பாக ஊராட்சித் தலைவர் பாபாசாகேப் கோராங்கே(38) பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.“எங்கள் கிராமத்தை சேர்ந்த சிலருக்கு நிலம் ஏதும் இல்லை.
அதேசமயம் அவர்களின் அடையாளம் என்று சொல்லிக் கொள்ளும் அளவிற்கு ஆவணங்களும் கிடையாது.ஆனால் தலைமுறை தலைமுறையாக இங்கு வசித்து கொண்டிருக்கின்றனர். இவர்கள் இந்த நிலத்தைசேர்ந்தவர்கள் தான் என்று நிரூபிக்க எந்தவித அடையாளமும் இல்லை. அதற்காக அவர்களை நாங்கள் தூக்கி எறிந்துவிட முடியுமா?” என்று அந்த பேட்டியில் கேள்வி எழுப்பியுள்ளார்.மேலும், “எங்கள் கிராமத்தில் முஸ்லிம்கள் ஒருவர் கூட இல்லை; இருப்பினும் மனிதநேயத்தின் அடிப்படையிலேயே இப்படியொரு தீர்மானத்தை நிறைவேற்றிஇருக்கிறோம்” என்றும் குறிப் பிட்டுள்ளார்.