jammu-kashmir

img

புல்வாமா தாக்குதலுக்குப்பின்னால் மோடி - பரூக் அப்துல்லா குற்றச்சாட்டு

புல்வாமா தாக்குதலுக்குப் பின்னாலிருப்பது பிரதமர் மோடியே என்றும், தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக இவ்வாறு அவர் செயல்பட்டுள்ளார் என்றும் தேசியமாநாட்டுக் கட்சித் தலைவரான பரூக் அப்துல்லா குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: புல்வாமாவில் பிப்ரவரி 14 அன்று காரில் கொண்டுவரப்பட்ட வெடிமருந்துகள் வெடிக்கப்பட்டதன் மூலம் 44 துணை ராணுவப் படையினர் கொல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் பதற்ற நிலைமை உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியா பழிக்குப்பழி வாங்குவதாக் கூறி பாகிஸ்தானில் பாலக்கோட் பகுதியில் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதக் குழுவின் முகாம்கள் மீது துல்லியத்தாக்குதல் நடத்தியது. ஆனால் இந்தத் தாக்குதலில் மரங்களுக்குத்தான் பாதிப்புகள் ஏற்பட்டதாக வெளிநாட்டு செய்தி நிறுவனங்கள் கூறியுள்ளன. இத்தாக்குதல் தொடர்பாக இந்தியா சார்பில் ஐ.நா. குழு ஒன்று அமைக்கப்பட்டு புலனாய்வு மேற்கொள்ளப்பட்ட ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து உண்மையான விவரங்களை வெளிக்கொணர வேண்டும்.

இப்போது நாட்டை ஆட்சி செய்பவர்கள், மகாத்மா காந்தியைக் கொன்ற கூட்டமேயாகும். இதனைத் தொடர்ந்து அப்போது உள்தறை அமைச்சராக இருந்த வல்லபாய் பட்டேல் ஆர்எஸ்எஸ் இயக்கத்தைத் தடை செய்தார். கார்கில் யுத்தம் குறித்து அமெரிக்கா சொன்ன விவரங்களை ஒப்புக் கொள்ளும் மோடி அரசாங்கம், இப்போது பாலக்கோட் தாக்குதல் தொடர்பாக அங்கே மரங்களுக்கு மட்டுமே பாதிப்பு ஏற்பட்டதாகக் கூறுவதை ஏற்க மறுக்கிறது. இவ்வாறு பரூக் அப்துல்லா கூறினார்.

(ந.நி.)


;