tamilnadu

img

அனைவரும் விடுதலையான பின்பே எதிர்கால போராட்டம் பற்றி திட்டம்... சிறைமீண்ட பரூக் அப்துல்லா பேட்டி

ஸ்ரீநகர்:
ஜம்மு - காஷ்மீரில் கைதான அனைவரும் விடுவிக்கப்பட்ட பின்னரே, எதிர்காலத் திட்டம் குறித்து முடிவு செய்யப்படும் என்று வீட்டுச் சிறையிலிருந்து விடுதலையான, காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

காஷ்மீருக்கான மாநில அந்தஸ்து மற்றும் சிறப்பு உரிமைகளைப் பறித்த மோடி அரசு,அம்மாநில முன்னாள் முதல்வர்கள்பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் பலரையும்பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ்வீட்டுச் சிறையில் வைத்தது. அவர்களை விடுவிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்த நிலையில், பரூக் அப்துல்லாமட்டும் தற்போது வீட்டுச் சிறையிலி
ருந்து விடுதலை செய்யப்பட்டுள் ளார். அவர் 7 மாதங்களுக்குப் பின்வெள்ளிக்கிழமையன்று வெளியுலகைப் பார்த்தார். 

இந்நிலையில், “எனது விடுதலையை நம்ப முடியவில்லை. இதுஎனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. விடுதலைக்குத் துணையாக இருந்தமாநில மக்கள், தேசத்தின் மக்கள்,எனக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கிறேன்” என்று பரூக் அப்துல்லா கூறியுள்ளார்.மேலும், “சுதந்திரம் இன்னும் முழுமையடையவில்லை; மெகபூபா முப்தி, உமர் அப்துல்லா மற்றும் சில எம்எல்ஏ-க்கள் சிறையில் தான் இருக்கிறார்கள்; அவர்கள் அனைவரும் விடுதலை அடையும் வரையில் நான் அரசியல் பேசப் போவதில்லை; அனைவரும் விடுதலையான பின்பே, எதிர்கால நடவடிக்கைகள் குறித்து திட்டமிடப் படும்” என்று தெரிவித்துள்ளார்.சனிக்கிழமையன்று, ஸ்ரீநகர் கிளைச்சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தனது மகனும் காஷ் மீர் முன்னாள் முதல்வருமான உமர்அப்துல்லாவைவும், பரூக் அப் துல்லா நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.