internet

img

தேர்தலை ஒட்டி ட்விட்டரில் புதிய அம்சங்கள் அறிமுகம்!

இந்தியாவின் நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி, தவறான தகவல்களை கொண்ட ட்விட்டர் பதிவுகளை தெரிவிக்க புதிய வசதியை ட்விட்டர் அறிமுகப்படுத்தி உள்ளது.

ட்விட்டரில் தவறான தகவல்களை கண்டறிந்து அதனை தெரிவிக்கும் ’ரிபோர்ட்’ வசதியில் 'its misleading about voting' என்ற ஆப்ஷனை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்திய பொது தேர்தல் மற்றும் ஐரோப்பிய தேர்தலை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

ட்விட்டரில் தவறான தகவல்கள் பரவுவதை தடுக்கவும், மற்றபடி விதிகளை மீறாமல் இருக்கும் நோக்கில் இரண்டு புதிய அம்சங்கள் வழங்கப்படுவதாக ட்விட்டர் தெரிவித்துள்ளது. ட்விட்டரை உரையாடல்களுக்கு மட்டுமே பயனர்கள் பயன்படுத்த வேண்டும் என அந்நிறுவனம் கருதுகிறது.

இந்திய பொது தேர்தல் 2019 மற்றும் ஐரோப்பிய யூனியன் தேர்தல் காலத்தில் மக்களுக்கு இந்த அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், மேலும், உலகம் முழுக்க பல்வேறு நாடுகளிலும் தேர்தல் சமயத்தில் இந்த அம்சம் அறிமுகம் செய்யப்படும் என ட்விட்டர் தெரிவித்துள்ளது.

இது தவிர, தேர்தல் தேதி மற்றும் நேரம் உள்ளிட்ட விவரங்களை தவறாக பதிவிடுவதும் ட்விட்டர் தகவல் விதிகளுக்கு எதிரானது. வாக்களிப்பது பற்றி தவறான விவரங்களை ட்விட்டரில் பதிவிட முடியாது. மேலும், ரிபோர்ட் செய்யப்பட்ட கணக்கில் இருந்து வாக்களிப்பது பற்றி எவ்வித தகவலையும் அவர்களால் பதிவிட முடியாது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 


;