tamilnadu

img

ஐரோப்பாவில் மீண்டும் கொரோனா அலை?

லண்டன் 
உலகின் வளமிக்க கண்டமான ஐரோப்பாவில் பெரும்பலான நாடுகள் கொரோனா தொற்றால் உருக்குலைந்து. இதில் அதிகம் பாதிக்கப்பட்டது ரஷ்யா, இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ், பிரிட்டன் ஆகிய நாடுகள் மட்டும் தான். ரஷ்யாவில் (7.07 லட்சம்) பாதிப்பு அதிகம் என்றாலும்,  அங்கு இறப்பு விகிதம் சற்று குறைவு. ஆனால் இத்தாலி, பிரான்ஸ், பிரிட்டன், ஸ்பெயின் ஆகிய நாடுகளில் பாதிப்பு 3 லட்சத்திற்குள் தான் உள்ளது என்றாலும் அங்கு இறப்பு விகிதம் அதிகம். எனினும் தற்போதைய நிலையில் ரஷ்யாவை தவிர மற்ற நாடுகள் கடந்த மாதமே கொரோனா பரவலை ஓரளவு கட்டுப்படுத்தியிருந்தது. 

இந்நிலையில் மீண்டும் அங்கு கொரோனா தனது இரண்டாம் அலையை தொடங்கியுள்ளது போன்று தெரிகிறது. காரணம் ஸ்பெயின், இத்தாலி, பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ், பெலாரஸ், ஸ்வீடன் ஆகிய நாடுகளில் கொரோனா   பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் கணிசமாக உயர்ந்து வருகிறது. குறிப்பாக பிரிட்டனில் பாதிப்பும், பலி எணிக்கையையும் சற்று அதிகரித்து வருகிறது.