internet

img

ட்விட்டர் முடக்கத்தால் பயனாளர்கள் அவதி

பிரபல சமூக வலை தளங்களில் ஒன்றான ட்விட்டர் வசதிகள் திடீரென முடங்கியுள்ளதால் பயனாளர்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். 
உலக அளவில் அரசியல் தலைவர்கள், நடிகர்கள் உள்ளிட்ட பல்துறை வல்லுனர்களும் ட்விட்டர் தளத்தை பயன்படுத்தி வருகின்றனர். 
இந்நிலையில் இந்தியாவில் ட்விட்டர் இணையதளம் திடீரென முடங்கியுள்ளது. மேலும் ட்விட் டெக் வசதியும் முடங்கி உள்ளது. இதனால் பயனாளர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். இதனால் லட்சக்கணக்கான  உலகளாவிய பயனர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.  ஜப்பான், கனடா மற்றும் இந்தியா உட்பட உலகளவில் இருந்தும் 4,000 க்கும் மேற்பட்ட புகார்கள் எழுந்துள்ளன.
இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள ட்விட்டர் நிறுவனத்தினர், ''ட்விட்டர் மற்றும் ட்விட் டெக் பயன்பாட்டில் முடக்கத்தை உணர்ந்துள்ளோம். இதனால் பயனர்களால் வழக்கமான செயல்பாடுகளை மேற்கொள்ள முடியாது. இதைச் சரி செய்யும் பணிகளில் உள்ளோம். விரைவில் ட்விட்டர் வழக்கமான பயன்பாட்டுக்கு வரும்'' என்று தெரிவித்துள்ளது.
முன்னதாக நேற்று, வட மற்றும் தென் அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான், கனடா ஆகிய நாடுகளில் ட்விட்டர் திடீரென முடங்கியது குறிப்பிடத்தக்கது.