செய்தி :- கருத்துக் கணிப்பால் பங்குச்சந்தை உற்சாகம்.
ச.சா - இதுக்காகத்தான் கருத்துக் கணிப்ப தயாரிச்சாங்களோ..?!?
**********************
தேசிய பசுமைத் தீர்ப்பாயம் :- கங்கை சுத்தமாக நடவடிக்கை தேவை.
ச.சா - சுத்தம் பண்றோம்னு அஞ்சு வருஷமா சொல்லி ஏமாத்துனதுக்கு என்ன நடவடிக்கை..??
**********************
முதல்வர் எடப்பாடி பழனிசாமி:- விவசாயத்தைப் பாதிக்கும் எந்த திட்டத்தையும் நடைமுறைப்படுத்த மாட்டோம்.
ச.சா - பச்சைப் பசேல் வயல்ல ராட்சத எந்திரங்கள் புகுந்து நாசம் பண்ணிருக்கே..?!?
**********************
மத்திய அமைச்சர் நிதின் கட்காரி :- கருத்துக்கணிப்பு முடிவுகள் இறுதியானது அல்ல.
ச.சா - உங்க அமைச்சரவை சகாக்கள் கிட்ட சொல்லிருங்களேன்..?!?