internet

img

யூடியூப், டிக்டாக் வீடியோ உருவாக்குபவர்களுக்காக புதிய வசதி அறிமுகம்!

கூகுள் நிறுவனம், யூடியூப் மற்றும் டிக்டாக்கில் வீடியோ உருவாக்குபவர்களுக்கு, புதிய வீடியோ வசதி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைக் கொண்ட ஒரு புதிய டூல் ஒன்றை கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த டூல் யூடியூப் மற்றும் டிக்டாக் விடியோ உருவாக்குபவர்களுக்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த டூல் மூலம் உருவங்களை தானாக இனங் கண்டு செயற்படக்கூடியதாகவும், வீடியோத் தொழில்நுட்பங்களை கண்டறியக்கூடியதாகவும் இருக்கின்றது. இப் புதிய டூல் ஆனது ஆட்டோ ஃப்ளிப் (Auto Flip) என அழைக்கப்படுகின்றது. இது வீடியோ உள்ளடக்கத்தினை பகுப்பாய்வு செய்து தேவையான அளவிற்கு க்ராப் (crop) செய்கின்றது. யூடியூப் மற்றும் டிக்டாக் என்பவற்றிற்காக வீடியோக்களை உருவாக்குபவர்களுக்கு இந்த டூல் பெரும் உதவியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.