உலகின் பிரபல வலைதள தேடுபொறியான கூகுள் இன்று தனது 21வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறது.
கடந்த21 ஆண்டுகளுக்கு முன் 1998ஆம் ஆண்டு கலிபோர்னியாவில் உள்ள ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த இரண்டு பி.எச்டி மாணவர்கள் ஒரு தேடுபொறியை உருவாக்கினர். அவர்கள் லாரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் ஆகியோர் ஆவர். இவர்கள் முன்னதாக ‘பேக்ரப்’(Backrub) என்ற தேடுபொறி அல்காரிதமை(Algorithm) உருவாக்கி இருந்தனர். இதிலிருந்து மேம்பட்ட தேடுபொறியை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
தங்களின் புதிய புரோஜக்டிற்கு ‘googol' என்று பெயரிட்டனர். இதற்கு கணிதத்தில் 10ன் அடுக்கு 100 என்று பொருள். இதுவே பின்னர் பெயர் வழக்கத்தில் கூகுள்(Google) என்று மாற்றம் பெற்றது. இந்நிலையில் செப்டம்பர் 2019ல் கூகுளின் மொத்த மதிப்பு 300 பில்லியன் டாலர் என கணக்கிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் கூகுளின் 21 வது பிறந்தநாளையொட்டி, இன்றைய டூடுலில் பழைய மாடல் கம்ப்யூட்டர் ஒன்றின் முகப்பு பக்கத்தில் கூகுள் சர்ச் இன்ஞின் புகைப்படம் தெரிகிறது. மேலும் அந்த டூடுலில் 27-9-98 அதன் பிறந்த தினமும் தெரிகிறது.