===என்.ராஜேந்திரன்===
ஜிமெயில் பயனர்களுக்கு புதிய முகப்புத் தோற்றம் மற்றும் சில வசதிகளை தனது 15ஆம் ஆண்டு கொண்டாட்டத்தின்போது அறிமுகம் செய்தது. பரிசோதனை முறையில் வழங்கப்பட்ட இந்த
வசதிகள் தற்போது மேம்படுத்தப்பட்டு உலகம் முழுவதுமுள்ள அனைத்து கூகுள் பயனர்களுக்கும் வருகிற ஜுலை 2ஆம் தேதி முதல் முழுமையாக கிடைக்கவிருப்பதாக கூகுள் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. புதிதாக கிடைக்கும் வசதிகளில் டார்க் மோட் வசதிமற்றும் டைனமிக் மின்னஞ்சல் வசதிகள் முக்கியமானவையாக கூறப்படுகின்றன.
டார்க் மோட்புதிதாக வரவுள்ள ஜிமெயில் ஆப் அப்டேட்டில் இந்த கறுமைநிறத்தை பின்புலமாகக் கொண்ட டார்க் மோட் வசதி சேர்க்கப்படுகிறது. டார்க் மோட் பின்புலம் விரும்புகிறவர்கள் செட்டிங்ஸ் பகுதியில் சென்று இதனை செயல்படுத்திக் கொள்ளலாம். ஏற்கனவே,குரோம் பிரௌசர் மற்றும் யூடியூப் தளத்தில் டார்க் மோட் வசதிஉள்ளது. இவ்வசதி கூகுள் தேடல் தளம் மற்றும் டிரைவ் வசதிகளிலும் கிடைக்க உள்ளது. ஆண்ட்ராய்டு இயங்குதளத்தின் அடுத்தபதிப்பான Android Q அப்டேட்டில் டார்க் மோட் வசதி முழுமையாகவழங்கப்படும் என்று தெரிகிறது.
டைனமிக் மெயில்
கூகுள் சில மாதங்களுக்கு முன்பாகவே தன்னுடைய கணினிவழி மின்னஞ்சல் சேவையில் டைனமிக் மெயில் சேவை பரிசோதனையை தொடங்கிவிட்டது. இச்சேவை தற்போது முழுமையாக விரிவுபடுத்தப்பட்டு அனைவருக்கும் வழங்கப்படவுள்ளது.ஒரு முறை ஒரு மின்னஞ்சலை மட்டுமே பார்த்து பதில்அனுப்பும் வகையில் இருந்ததை மாற்றி இன்பாக்ஸ் பகுதியிலிருந்தே பல மின்னஞ்சல்களை ஒரே நேரத்தில் பார்க்கவும், பதில்அனுப்பவும் கூடிய வகையில் தற்போது வசதி செய்யப்பட்டுள்ளது. கூகுள் ஹேங்அவுட் சேவையில் உள்ளது போல மின் னஞ்சல்களுக்கான பதில்களை சிறிய விண்டோ பாக்ஸில் அளித்து அனுப்பலாம். இதன் மூலம் ஒரே நேரத்தில் மற்ற மின்னஞ்சல்களையும் பார்த்துக் கொள்ளலாம், முக்கியமான மின்னஞ்சலுக்கு உடனே பதில் அனுப்பலாம்.
AMP (Accelerated Mobile Pages) என்ற தொழில்நுட்பம் மூலம் மின்னஞ்சலில் அனுப்பப்படும் இணைய முகவரி இணைப்புகளை கிளிக் செய்து புதிய பக்கத்தில் திறந்து பார்ப்பதற்கு பதிலாக, மின்னஞ்சலை விட்டு வெளியேறாமல் அதே திரையில் இணையதளத்தை பார்க்கலாம்.இந்த டைனமிக் மின்னஞ்சல் வசதிக்காக Oyo Rooms,redBus, Booking.com, Despegar, Doodle, Ecwid, Freshworks, Nexxt மற்றும் Pinterest. உள்ளிட்ட இணையதளங்களுடன் கூட்டணி அமைத்துள்ளது.
மெயில் அனுப்பும் நேரம்
மின்னஞ்சலை குறிப்பிட்ட நாள் நேரத்துக்கு முன்பாகவே தயார் செய்து வைத்துக் கொண்டு குறிப்பிட்ட நேரத்தில் தானாகவேஅனுப்பும் வசதி தற்போது சேர்க்கப்பட்டுள்ளது. இந்த வசதியைப்பெற கம்போஸ் விண்டோவில் செண்ட் பட்டனுடன் அம்புக்குறியொன்று இணைக்கப்பட்டுள்ளது. அதனை கிளிக் செய்தால்Schedule send வசதி தோன்றும். அதனைக் கிளிக் செய்து சேரவேண்டிய நாள், நேரத்தை தேர்வு செய்து அமைத்துவிட்டால் போதும். வாழ்த்து செய்திகள், நினைவூட்டல்களை அனுப்ப இந்தவசதி பயனுள்ளதாக இருக்கும்.மின்னஞ்சலைத் திறக்காமலே இணைப்புகளை பார்க்க
லாம், பதில்களை அனுப்பலாம் என்பதுடன், நமக்கு வரும் மின்னஞ்சல் தகவலுக்கு ஏற்ப பதில்கள், கருத்துக்களை அனுப்புவதற்கு நேரத்தை விரயமாக்காமல் பரிந்துரை வாக்கியங்களை காட்டும்படியாக அமைந்த மெய்நிகர் தொழில்நுட்ப (ArtificialIntelligent) வசதி ஆகியவை குறிப்பிடத்தக்க சிறப்பம்சங்களாகும்.இந்த வசதிகளால் மின்னஞ்சல்களை எளிதாகவும் விரைவாகவும் கையாள்வது சாத்தியமாகும் என்று கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.மேற்கூறிய வசதிகள் தற்போது ஜிசூட் (GSuite) என்ற கட்டணசேவையில் கிடைக்கிறது. ஜூலை 2 முதல் அனைத்து பயனரும்பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் வசதிகளுடன் கூகுள் மேப்
கூகுளின் மற்றொரு முக்கிய சேவையான கூகுள் மேப்ஸ்-ல் வாகனத்தின் வேகத்தை காட்டும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கென வேஸ் (Waze) என்ற நிறுவனத்திடமிருந்து சில தொழில்நுட்பங் களைப் பெற்று ஸ்பீட் கேமரா, ஸ்பீட் ட்ராப்கள்போன்ற வசதிகளை கூகுள் மேப்பில் ஏற்கனவே கூகுள் இணைத்திருந்தது. தற்போது புதிதாக ஸ்பீடோ மீட்டர் சதியையும் இணைத்துள்ளது.இந்த மீட்டர் உங்கள் வாகனத்தின் வேகத்தை கட்டுக்குள் வைக்கவும். குறிப்பிட்ட வேகத்தை தாண்டி நீங்கள் வாகனங்களைஓட்டினால் எச்சரிக்கையும் செய்யும். தற்போது அமெரிக்கா, பெல்ஜியம், இங்கிலாந்து, பிரேசில் ஆகிய நாடுகளில் மட்டும்அறிமுகமாகியுள்ளது. விரைவில் உலகம் முழுவதும் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளது. அடுத்ததாக, இந்தியப் பயணிகளுக்காக 3 புதிய வசதிகளைசில நகரங்களில் கூகுள் மேப்பில் அறிமுகம் செய்துள்ளது. ஒன்று, நிகழ் நேர போக்குவரத்து நெரிசல்களை காட்டுவது.இதில், வழக்கமாக அந்த இடத்தைக் கடக்க ஆகும் நேரம், நெரிசலின் போது ஆகும் நேரம் உள்ளிட்டவை சிவப்பு நிறத்தில் அடையாளமிட்டுக் காட்டப்படும். இந்த வசதி, சென்னை, கோவை, பெங்களூரு, மும்பை தில்லி உள்ளிட்ட நகரங்களில் நடைமுறைக்கு வந்துள்ளது.
இரண்டாவது, ரயில் பயணிகளுக்கானது. பயணிக்க விரும்பும்குறிப்பிட்ட ரயில் எங்கு வந்து கொண்டிருக்கிறது, தாமதமாகும் நேரம்உள்ளிட்ட விபரங்களை கூகுள் மேப்பிலேயே அறிந்து கொள்வதற்கானதாகும். வேர் ஈஸ் மை டிரெயின் (Where is My Train)என்ற செயலியை கூகுள் வாங்கியுள்ளதை அடுத்து அச்செயலியின் தொழில்நுட்பம் இணைக்கப்பட்டு இவ்வசதி வழங்கப்படுகிறது.
மூன்றாவது, ரயில், பேருந்து போன்ற பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தும் பயணி ஒருவர், இறங்கிய இடத்தில் இருந்து எவ்வளவு தூரத்தில், ஆட்டோ அல்லது மெட்ரோ ரயில் வசதி கிடைக்கும், அதற்கு ஆகும், நேரம், தூரம், கட்டண விவரங்கள் ஆகிய தகவல்களை கூகுள் மேப் மூலம் அறிந்து கொள்ளலாம். இந்த வசதி தற்போது தில்லி, பெங்களூர் போன்ற நகரங்களில் மட்டும் வழங்கப்பட்டுள்ளது. விரைவில் பிற நகரங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று தெரிகிறது.