internet

img

கணினிக்கதிர் : ஆண்ட்ராய்ட் 10 மேம்படுத்தப்பட்ட வசதிகள்

கூகுள் நிறுவனம் தனது ஆண்ட்ராய்டு இயங்குதளங்களுக்கு ஆரம்பம் முதலேஆங்கில அகர வரிசையில், புகழ் பெற்ற இனிப்புவகைகளின் பெயர்களை சூட்டுவதை வழக்கமாகக் கொண்டிருந்தது. கடைசியாக வெளிவந்த 9வது பதிப்பு பை (Pie) என்று பெயரிடப்பட்டிருந்தது. அடுத்து வரும் இயங்குதளம் Q என்று எதிர் பார்க்கப்பட்ட நிலையில், முந்தைய வழக்கத்தை மாற்றி ஆண்ட்ராய்டு 10 என எண் வரிசையில் பெயரிட்டு கடந்த செப்டம்பர் 3ஆம் தேதி அன்று வெளியிடப்பட்டுள்ளது. தற்போது வெளியாகும் இப்பதிப்பு பெயரில் மட்டுமல்லாமல், செயல்பாட்டிலும் பல புதிய அம்சங்களைக் கொண்டுவந்துள்ளது.இதுவரை வெளியிடப்பட்ட பதிப்புகள் அனைத்தும் முதல் வெளியீட்டின்போது கூகுள் தயாரிப்பு பிக்சல் போன்களிலும், ஒரு சில உயர்தரபிரீமியம் போன்களிலும் மட்டுமே அறிமுகமாகும். பிறகு படிப்படியாக மற்ற போன்களுக்கு அறிமுகப்படுத்தப்படும். இந்த வழக்கத்தில் ஒரு முன்னேற்றமாக கூகுள் பிக்சலுக்குப் பிறகு சாம்சங்,நோக்கியா, சியோமி ரெட்மீ, ரியல்மீ, அசூஸ்,மோட்டோரோலா, ஒன்பிளஸ் ஒன், ஓப்போ ஆகியநிறுவனங்களின் முன்னணி மாடல்களுக்கும் விரைவில்  வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஆண்ட்ராய்ட் 10 சிறப்பம்சங்கள்
டார்க் மோட்  வசதி
ஒரு சில வாரங்களுக்கு முன்பே ஆண்ட்ராய்ட் 10 பதிப்பில் டார்க்மோட் அம்சம் வருகிறது என்பதை தெரிவித்திருந்தோம். அது தற்போது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. கண்களுக்கு இதம் தரும் கருமையான பின்புலத்தைக் கொண்ட இந்த அம்சத்தை செயல்படுத்தும் வசதி, செட்டிங்ஸ் பகுதியில் உள்ள பேட்டரி டேப்பின் கீழ் வழங்கப்பட்டுள்ளது. திரைஅதிக ஒளி உமிழ்வதைக்  குறைப்பதால்  பேட்டரி சக்தி வீணாவது தவிர்க்கப்படுகிறது.

இருப்பிடத்தை அறிந்து கொள்வதை தடுக்கும் வசதி:
பயனரின் இருப்பிடத்தை (லோக்கேஷன்) அறிந்து கொள்வது தனியுரிமையை பாதிக்கும் என்பதால், ஆப்ஸ்கள் உங்கள் இருப்பிடம் சார்ந்த விவரங்களை சேகரிப்பதை நீங்கள் முழுமையாககட்டுப்படுத்தும் வசதி இதில் வழங்கப்பட்டுள்ளது. லோக்கேஷன் சேவையை இயக்குவது, நிறுத்துவதுபோன்ற வழக்கமான வசதியுடன், குறிப்பிட்ட ஆப்உதாரணமாக ஆன்லைன் டேக்ஸி புக் செய்யும்ஆப்கள் பயன்படுத்தும்போது, அந்த ஆப் இருப்பிடத்தை அறிந்து கொள்ள அனுமதிக்கும்போது, எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் அல்லது ஆப் பயன்பாட்டில் இருக்கும்போது மட்டும் பயன்படுத்தலாம் அல்லது வேண்டாம் என்பதைத் தேர்வு செய்யும் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது.

பிரைவஸியில் கவனம்
அனைத்துவிதமான தனிநபர் உரிமைகளுக்கான அமைப்புகளையும் ஒருங்கே பிரைவஸிஅமைப்பின் கீழ் கொண்டு வந்துள்ளது. இணையத்திலும், ஆப் செயல்பாட்டிலும் பதிவாகும் டேட்டாக் களில் எவை பதிவாகலாம், எவ்வளவு காலம் இருக்கலாம் என்பதை தீர்மானிக்கும் வசதி உள்ளது.அத்துடன் உங்கள் சுயவிபரங்கள், இணையப் பயன்பாடுகளை அறிந்து அதற்கேற்ப விளம்பரங்கள் காட்டப்படுவதையும் கட்டுப்படுத்தலாம்.

வைஃபை பகிர பாஸ்வேர்டுக்கு பதிலாக கியூஆர் கோடு
வைஃபை பயன்பாட்டை பெறுவதற்கு கடவுச் சொல்லை கேட்டுப் பெற்று உள்ளிடுவதற்கு பதிலாக,QR குறியீட்டை பயன்படுத்தி ஒரு Wi-Fi நெட்வொர்க்குடன் எளிதாக இணைக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது.

ஃபோகஸ் மோட் (Focus Mode)
மின்னஞ்சல், ஃபேஸ்புக், வாட்ஸ்ஆப் போன்றவற்றைப் பயன்படுத்திக் கொண்டிருக்கும்போது மற்ற ஆப்களின் நோட்டிபிகேஸன்கள் நம் கவனத்தை சிதறடிக்கும். இதை தற்காலிகமாக நிறுத்த உதவும் ஃபோகஸ் மோட் என்ற பெயரில் வழங்கப்பட்டுள்ளது.
கருத்துக்களை உடனுக்குடன் பகிர்தல்வீடியோ தளங்களில் ரசிக்கும் பகுதிகளில் உங்களது கமெண்ட்களை  பதிவிடும் வசதி வழங்கப்பட்டுள்ளது. இதனை செயல்படுத்த வீடியோ இயங்கிக் கொண்டிருக்கும் போது ஒலி (Volume)பட்டனைக் கிளிக் செய்தால் தோன்றும் ஸ்லைடரில் கருத்து பகிர்வதற்கான (caption button) காட்டப்படும். அதனைக் கிளிக் செய்து உங்கள் கருத்தை பகிரலாம்.

ஸ்மார்ட் ரிப்ளை
குறுஞ்செய்திகளுக்கு ஸ்டிக்கர் மற்றும் இமோஜி படங்கள் கொண்டு எளிதாக பதிலளிக்கும் வசதி சேர்க்கப்பட்டுள்ளது. இதுபோன்ற வசதி  சிக்னல் போன்ற ஆப்களில் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள ஒன்றுதான்.தெளிவான ஒலியைப் பெறும் வசதி சவுண்ட் ஆம்பிளிஃபயர் (Sound Amplifier) என்ற இந்த வசதியில் குறைந்த ஒலியில் பதிவு செய்யப்பட்ட கோப்புகளையோ, தெளிவற்ற இரைச்சலான ஒலியுடன் ஒலிபரப்பாகும் டிவி நிகழ்ச்சிகள் அல்லது ஒலிக் கோப்புகளையோ இரைச்சலைக்குறைத்து சரிசெய்து கேட்கும் வசதி வழங்கப் பட்டுள்ளது.

பேட்டரி இண்டிகேட்டர்
பேட்டரி மின் சேமிப்பு அளவு காட்டும் முறையில்மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.  இதில்  பேட்டரியின் சதவீதத்திற்கு பதிலாக எப்போது வரை தாக்குப்பிடிக்கும் என்பதை கால அளவை காட்டும்வகையில் அமைக்கப்பட்டுள்ளது. அதாவது காலையில் உங்களின் பேட்டரியை நிலையப் பார்க்கும் போது சுமார் இரவு 10 மணி வரை பேட்டரி தாக்குப்பிடிக்கும் என்ற செய்தி காட்டப்படும். இது உங்களின்சராசரிப் பயன்பாட்டை ஒட்டியே கணக்கிடப்படும். கூடுதல் ஆப்கள் பயன்படுத்தும்போது இந்த நேரஅளவு குறைந்து 9 மணி, 8 மணி என்று படிப்படியாக மாறிக் காட்சியளிக்கும்.

ஐபோன் வசதி ஆண்ட்ராய்டில்
ஆப்பிள் ஐபோன்களில் திரையை தொட்டுஒவ்வொரு திசையில் விரலை நகர்த்தும்போது ஒவ்வொரு அம்சம் தென்படும். Gesture Navigationஎன்ற இந்த வசதி ஐபோனுக்கு இணையாக ஆண்ட்ராய்ட் 10லும் மேம்படுத்தப்பட்டுள்ளது.புதிய ஆடியோ மற்றும் வீடியோ ஃபார்மெட்கள் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தில் கூடுதலாக புதிய வீடியோ Codecs-களை ஆதரிக்கவுள்ளது. எனவே பயனர்கள் தங்கள் ஸ்மார்ட்போன்களில் பல வகையான வீடியோ ஃபார்மெட்களை இயக்கிப்பார்ப்பது சாத்தியமாகியுள்ளது.

மடக்கும் டிஸ்பிளே போன்களுக்கு ஏற்ற வடிவமைப்பு
மடக்கி வைத்துக் கொள்ளும் வகையிலான ஃபோன்கள் தற்போது அறிமுகப்படுத்தப்பட உள்ள நிலையில் அதற்கேற்பவும் இந்த இயங்குதளத்தில் பல மாற்றங்களை கொண்டு வந்திருக்கிறது கூகுள். 5ஜி இணைய சேவை பயன்பாட்டிற்கும்,மடக்கும் டிஸ்ப்ளே என்று அனைத்துக்கும் உதவும்வகையிலான UI வடிவமைப்பை இது கொண்டுள்ளது. கூடுதலாக கண்ணைக்க வரும் பேக்கிரவுண்ட் மற்றும் தீம்களும் வழங்கப்பட்டுள்ளன.

===என்.ராஜேந்திரன்===