internet

img

இலங்கையில் சமூக வலைத்தளங்களுக்கான தடை நீங்கியது

இலங்கையில் கடந்த ஏப்ரல் 21-ஆம் தேதி நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதல்களை அடுத்து, சமூக வலைத்தளங்களுக்கு விதிக்கப்பட்ட தடை இன்று நீக்கப்பட்டது.

இலங்கை தலைநகர் கொழும்புவில் கடந்த ஏப்ரல் 21-ஆம் தேதி, ஈஸ்டர் தினத்தன்று நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு காரணமாக, ஊரடங்கு உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்தது. இதையடுத்து கடந்த ஏப்ரல் 21-ஆம் தேதி, குண்டுவெடிப்பு சம்பவங்கள் தொடர்பான தவறான செய்திகளும், வதந்திகளும் பரவாமல் தடுக்கும் வகையில் பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை அரசு முடக்கியது.

இந்நிலையில் சமூக வலைத்தளங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை இலங்கை அரசு இன்றுடன் நீக்கியது. இதேபோல் தாக்குதல்களை தொடர்ந்து ஒரு வாரமாக நீடித்த இரவுநேர ஊரடங்கு உத்தரவையும் கடந்த ஏப்ரல் 28-ஆம் தேதி அன்று நீக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


;