internet

img

இந்த வருடத்தின் மிக நீண்ட பகலை இன்று சந்திக்கும் வடதுருவம் – கூகுளின் சிறப்பு டூடுல்!

இந்த வருடத்தின் மிக நீண்ட பகலை இன்று வடதுருவம் சந்திக்கும் நிகழ்வை மையப்படுத்தி  கூகுள் நிறுவனம் சிறப்பு டூடுள் ஒன்றை வெளியிட்டுள்ளது.

பூமி சூரியனை நீள்வட்டப் பாதையில் சுற்றிவரும் போது, பூமி தன்னுடைய அச்சில் 23.44 டிகிரி சாய்வாக தன்னைத்தானே சுற்றிக் கொள்கிறது. இந்த சாய்வு காரணமாக பூமியின் ஏதோ ஒரு கோளம் (வட அரைக்கோளம் அல்லது தென் அரைக்கோளம்) மட்டுமே சூரியனுக்கு அருகில் அமைந்திருக்கும். இந்நிலையில், இன்று பூமியின் வட அரைக்கோளம் சூரியனுக்கு அருகில் அமைந்திருப்பதால், சூரிய ஒளி அப்பகுதியில் அதிகமாக விழுகிறது. இதனால், வடதுருவத்தில் வாழும் மக்கள் இந்த வருடத்தின் மிக நீண்ட பகலை சந்திக்க இருக்கிறார்கள். 

தென்துருவம் நீண்ட தூரத்தில் இருப்பதால், சூரிய ஒளியே இருக்காது. இதனால் தென்துருவத்தில் இருக்கும் மக்கள் இந்த வருடத்தின் மிக குறுகிய பகலை அல்லது மிக நீண்ட இரவை சந்திக்கிறார்கள். இந்த நிகழ்வை மையப்படுத்தி கூகுள் நிறுவனம் சிறப்பு டூடுளாக வெளியிட்டுள்ளது.