internet

img

மொபைல் சாதனங்களுக்கான கூகுள் ஏர்த் செயலியில் புதிய வசதி அறிமுகம்

மொபைல் சாதனங்களுக்கான கூகுள் ஏர்த் செயலியில் புதிய வசதி ஒன்றை கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. 

கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள இந்த புதிய பதிப்பில் நட்சத்திரங்களை பார்வையிடக்கூடிய புதிய வசதியும் உள்ளடக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில் மக்களின் எதிர்பார்ப்பினை கருத்தில்கொண்டு நட்சத்திரங்களை பார்வையிடும் புதிய வசதியினை கூகுள் ஏர்த்தில் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கூகுள் ஏர்த் செயலியில் காணப்படும் பூமியை சிறிதாக்குவதன் மூலம் அதனைச் சுற்றியுள்ள நட்சத்திர கூட்டங்கள் மற்றும் மில்கி வேயின் முப்பரிமாண முறையில் பார்வையிட முடியும். அத்துடன் இதற்காக பூமியிலிருந்து 30,000 மைல்கள் தொலைவு வரை தென்படக்கூடியதாக படம் பிடிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த புதிய வசதியானது, ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் மொபைல் சாதனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. பயனர்கள் தங்கள் மொபைலில் தரவிறக்கம் செய்துள்ள கூகுள் ஏர்த் செயலியை அப்டேட் செய்வதன் மூலம் இந்த புதிய வசதியை பெற்றுக் கொள்ள முடியும்.