பேஸ்புக்கில் பதிவிடப்படும் போஸ்ட்களின் லைக் எண்ணிக்கை மறைக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பிரபல சமூக வலைதளமான பேஸ்புக்கில் அவ்வப்போது புதிய அப்டேட்கள் செய்யப்பட்டு வருகின்றன. பேஸ்புக்கில் பயனர்கள் பகிரும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு, அவர்களை பின் தொடரும் பயனர்களுக்கு லைக் மற்றும் ரியாக்ட் செய்யும் வசதி உள்ளது. இது பயனர்கள் மத்தியில் எதிர்மறை எண்ணங்களை விதைப்பதாக தகவல் வெளியானது. இதை அடுத்து, ’லைக்-ஹைடிங்’ என்ற வசதியை பேஸ்புக் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.
இதனால் பேஸ்புக் பதிவுகளின் லைக்களின் எண்ணிக்கை, ரியாக்ஷன்கள் மற்றும் வீடியோக்களுக்கான பார்வையின் எண்ணிக்கை போன்றவற்றை யாரும் பார்க்க முடியாது. பேஸ்புக் நிறுவனத்தின் இந்த சோதனை முயற்சி, அஸ்திரேலியா பயனர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த ஜூலை மாதம் முதல் ஆஸ்திரேலியா இன்ஸ்டாகிராமிலும் இந்த லைக்கள் மறைக்கும் வசதியை சோதனை முயற்சியாக வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.