இணைய உலகில் பெரும் ஆபத்துகளை விளைவிக்க கூடிய மோசமான 6 வைரஸ்களை கொண்டுள்ள "பெர்சிஸ்டன்ஸ் ஆஃப் கேயாஸ்” என்ற லேப்டாப், 1.34 மில்லியன் டாலருக்கு ஏலம் நிறைவு பெற்றுள்ளது.
சாம்சங் நிறுவனம், கடந்த 2008-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்திய என்சி10-14ஜிபி மற்றும்10.2 இன்ச், நீல நிற நெட்புக்கில் தான் வைரஸ்கள் தற்போது குடிகொண்டுள்ளன. விண்டோஸ் XP தளத்தில் இயங்கும் இந்த லேப்டாப்பில், ஐ லவ் யூ( ILOVEYOU ), மை டூம்( MyDoom), சோ பிக்( SoBig ), வான்ன க்ரை( WannaCry), டார்க் டக்கீலா( Dark Tequila), பிளாக் எனர்ஜி (BlackEnergy) ஆகிய ஆறு வைரஸ்கள் செலுத்தியவர் சீனாவை சேர்ந்த க்யோ ஓ டாங்.
இதில் வான்ன க்ரை வைரஸ் கடந்த 2017-ஆம் ஆண்டில் பல ஆயிரம் கணினிகளில் பாதிப்பு ஏற்படுத்தியது. அதேபோல், கடந்த 2004-ஆம் ஆண்டு வெளிவந்த மை டூம் வைரஸ் உலக வரலாற்றில் அதிவேகமாக பரவிய வைரஸ் ஆகும். கடந்த 2003-ஆம் ஆண்டு வெளிவந்த சோ பிக் (SoBig) வைரஸால், பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் 37 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு பறிபோனது. இதை போன்று மற்ற மூன்று வைரஸ்களும் பெரு பாதிப்பு ஏற்படுத்தி உள்ளது.
இந்த லேப்டாப்பை ஆய்வுகளுக்கு மட்டும் பயன்படுத்தினால் நல்லது என இந்த வைரஸ்களை ஏற்றிய டாங் தெரிவித்துள்ளார். தற்போது இணையத்திலிருந்து விலக்கப்பட்டு இருக்கிறது. இந்த லேப்டாப்பை இணைக்கும் ஒவ்வொரு கணினியும் நொடிப்பொழுதில் பதிப்புக்கு உள்ளாகும். இத்தனை ஆபத்தான வைரஸ்களை கொண்டுள்ள லேப்டாப்பை இணையத்தில் நேரிடையாக ஏலத்திற்கு விடும் அளவிற்கு தொழில்நுட்ப வசதிகள் ஹேக்கர்களின் கையில் இருக்கிறது என்பது மட்டும் அதிர்ச்சியளிக்கும் உண்மை.