திங்கள், ஜனவரி 18, 2021

internet

img

இயக்குநர் பா.ரஞ்சித் உடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன்: அனுராக் காஷ்யப்

காலா படத்தை மிகவும் தாமதமாகப் பார்த்திருக்கிறேன். தற்போது உங்களுடைய அத்தனை படங்களையும் பார்க்க மிக ஆர்வமாக இருக்கிறேன் என்று இயக்குநர் பா.ரஞ்சித்தை வாழ்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார் பிரபல இந்தி இயக்குநரும் நடிகருமான அனுராக் காஷ்யப்.

பாலிவுட் திரைப்பட உலகின் மிக முக்கியமான இயக்குநர்களில் ஒருவர் இயக்குநர் அநுராக் காஷ்யப். பல புதிய முயற்சிகளின் மூலம் இந்திய சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்கிற முனைப்பில் இருக்கும் அவர், பாலிவுட்டில் அறிமுகம் ஆக இருக்கிற தமிழ் இயக்குநர் பா.இரஞ்சித்தை சந்தித்தது பேசினார்.

இந்த சந்திப்பில் இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான "காலா" திரைப்படம் குறித்து பேசியிருக்கிறார். அந்த படத்தின் அரசியல், குறித்தும் விரிவாக பேசியிருக்கிறார். 

"இந்திய அளவில் தலித் அரசியலை வெளிப்படையாகவும், நேர்மையாகவும் துணிச்சலாக பேசக்கூடிய படைப்பாளியான உங்களுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன்" என்றும் தனது விருப்பத்தினை தெரிவித்திருக்கிறார் அநுராக் காஷ்யப்.

இந்த சந்திப்பு குறித்து பதிலுக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்த இயக்குநர் பா.இரஞ்சித், "டியர் அனுராக் நான் உங்களுடைய தீவிரமான ரசிகன். இன்று மாலை உங்களுடன் நடந்த சந்திப்பு மிகவும் பெருமையானது. நல்ல உரையாடலுக்கும் நீங்கள் தந்த சுவையான உணவுக்கும் நன்றி கூறியுள்ளார் பா.ரஞ்சித்.

;