india

img

ஜூன் மாதம் முதல் குழந்தைகளுக்கான கோவாக்சின் தடுப்பூசி பரிசோதனைகள்.....

ஹைதராபாத்;
இந்தியாவில்  கோவாக்சின், கோவிஷீல்டு மற்றும்  ரஷியாவின் ஸ்பூட்னிக் வி ஆகியவை கொரோனா தொற்றுக்கு  எதிரான தடுப்பூசியாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.கொரோனா வைரஸ் தடுப்பூசி கோவாக்சின்  தயாரிப்பாளரான பாரத் பயோடெக் ஜூன் மாதம்  முதல்குழந்தைகளுக்கான தடுப்பூசி  பரிசோதனைகளைத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை  பாரத் பயோடெக் நிறுவனத்தின் வணிக மேம்பாடு மற்றும்சர்வதேச ஆலோசனை தலைவர்டாக்டர் ரேச்ஸ் எலா தெரிவித்துள்ளார்.

ஹைதராபாத்தை சேர்ந்த பெண்கள் அமைப்புடன்  கலந்துரையாடலின் போது டாக்டர் ரேச்ஸ் எலா கூறியதாவது:கோவாக்சின் மருந்துக்கு இந்த ஆண்டின் 3-வது அல்லது 4-வது காலாண்டுக்குள் உலக சுகாதார அமைப்பு அங்கீகாரம் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கோவாக்சின் உற்பத்தி திறன் இந்த ஆண்டு இறுதிக்குள் 70 கோடி அளவாக அதிகரிக்கும்.குழந்தைகளுக்கான கோவாக்சின் மருந்தின் கிளினிக்கல் பரிசோதனை ஜூன் மாதம் தொடங்க வாய்ப்பு உள்ளது. இந்த மருந்துக்கும் நடப்பு ஆண்டின் 3-வது காலாண்டில் அனுமதி கிடைத்துவிடும், அங்கீகாரமும் கிடைத்துவிடும். தடுப்பூசி குறித்து வாட்ஸ் அப்களில் வரும் ஆதாரமற்ற செய்திகளையும், வதந்திகளையும் மக்கள் நம்பக்கூடாது. பெரும்பகுதியான மக்களுக்கு தடுப்பூசி செலுத்திவிட்டாலே கொரோனா பரவுவது குறைந்துவிடும், மக்களுக்கு நோய்எதிர்ப்புச் சக்தி கிடைத்துவிடும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

;