india

img

விவசாயிகளின் பொறுமையை சோதித்துப்பார்க்காதீர்கள்... மத்திய அரசுக்கு சரத்பவார் எச்சரிக்கை....

மும்பை:
விவசாயிகள் விரோத வேளாண் சட்டங்களை ரத்துசெய்யக்கோரி தில்லி எல்லைகளை முற்றுகையிட்டும் பல்வேறு மாநிலங்களிலும் விவசாயிகள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனால் மோடி அரசு இதற்கு உரிய தீர்வுகாணாமல் இழுத்தடித்து வருகிறது. இப்போராட்டங்கள் குறித்து மத்திய அமைச்சர்கள் அவதூறாக பேசி வருகின்றனர்.இந்நிலையில் விவசாயிகளின் போராட்டம் குறித்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரும், முன்னாள்வேளாண்துறை அமைச்சரு
மான சரத்பவார் மும்பையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

வேளாண் மசோதாக்கள் மீது விரிவான விவாதம்நடத்தியபின் நாடாளுமன் றத்தில் நிறைவேற்றலாம் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. ஆனால் அவசர கதியில் நாடாளுமன்றத்தில் அவை நிறைவேற்றப்பட்டன.தற்போது வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தில்லி எல்லைகளில்போராடி வருகின்றனர். முதலில் வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுமாறும், அதன் பிறகு பிரச்சனைகளை பற்றிபேசலாம் என்றும் விவசாயிகள் கூறிவிட்டனர். ஆனால், மத்திய அரசு பிடிவாதமாக தனது நிலைப்பாட்டிலிருந்து மாற மறுக்கிறது. எனவே தற்போதைய நிலவரம் சாதகமாக செல்வதாக தெரியவில்லை. இந்த பிரச்சனையில் சிக்கல் மேலும் சில நாட்களுக்கு நீடிப்பதற்கான அறிகுறிகள் தெரிகின்றன.

ஏறக்குறைய 700 டிராக்டர்களில் விவசாயிகள் பல்வேறுமாநிலங்களில் இருந்து புறப்பட்டு தில்லி எல்லைக்கு வந்து போராட்டக்காரர்களுடன் சேர்ந்துள்ளனர். இந்தப்போராட்டம் தில்லி எல்லையோடு தடுக்கப்படுகிறது.விவசாயிகளின் பிரச்சனைகளை தீர்க்க சரியான நேரத்துக்குள் முடிவு எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் நாடு முழுவதும் போராட்டம் பரவுவதை தடுக்க முடியாது. இந்த நாட்டுக்கு உணவுவழங்குபவர்கள் விவசாயிகள். அவர்களின் பொறுமையை பரிசோதித்துப் பார்க்காதீர்கள்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

;