india

img

4 லட்சம் சுயம்சேவக்குகளை 12 லட்சம் வீடுகளுக்கு அனுப்பிவைக்க பாஜக திட்டம்..? ராமர் கோயில் நிதிவசூல் பெயரில் ‘2024’ தேர்தலுக்கு பிரச்சாரம்... சிவசேனா கட்சி குற்றச்சாட்டு....

மும்பை:
“அயோத்தியில் கட்டப்படும் ராமர்கோயிலுக்கு மக்களிடம் நிதி திரட்டுகிறோம் என்று கூறி, அதனை மிகப்பெரிய அளவில் 2024-ம் ஆண்டுக் கான மக்களவைத் தேர்தல் பிரச்சாரமாக மாற்றுவதற்கு பாஜக-வினர் திட்டம் தீட்டியுள்ளதாக சிவசேனா குற்றம் சாட்டியுள்ளது. இதனை நடக்க அனுமதிக்கக் கூடாதுஎன்றும் அந்த கட்சி கூறியுள்ளது.அயோத்தியில் ராமர் கோயில் கட்டும்பொறுப்பை மேற்கொண்டுவரும் ஸ்ரீராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையின் பொதுச்செயலாளர் சம்பத் ராய்கடந்த வாரம் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில், “நாடு முழுவதும் மிகப்பெரியஅளவில் மக்களைச் சந்தித்து, கோயிலுக்கான பங்களிப்பு செய்யக்கோரி பிரச்சாரம் செய்யப்படும். சமானிய மக்களிடம் இருந்து பணம் பெற்றுக் கோயில்கட்டப்படும். வெளிநாடுகளில் இருந்துநன்கொடை பெற அரசு அனுமதி கிடைக்கவில்லை” என்று தெரிவித்திருந்தார்.

அவரின் இந்த அறிவிப்பு குறித்தே சிவசேனா சந்தேகம் கிளப்பியுள்ளது. இந்த நன்கொடை பிரச்சாரம் 2024 மக்களவைத் தேர்தலை மையமாகக் கொண்ட பாஜகவின் அரசியல் திட்டமாக இருக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளது.இதுதொடர்பாக அந்தக் கட்சி, தனதுஅதிகாரப்பூர்வ பத்திரிகையான ‘சாம்னா’வில் எழுதியிருப்பதாவது:‘’அயோத்தி ராமர் கோயில் என்பது,ஒரு அரசியல் கட்சியின் லாபத்துக்காகக் கட்டப்படவில்லை. பொது நன்கொடைகள் மூலம் பிரமாண்டமான கோயில் கட்டப்படும் என்றும் ஒருபோதும் முடிவு செய்யப்படவில்லை.ஆனால், கடவுள் ராமர் பெயரில் நிதி திரட்ட செய்யப்படும் மிகப்பெரிய அளவிலான- அரசியல் ரீதியான பிரச்சாரம் ஒரு கட்டத்தில் நிறுத்தப்பட வேண்டும். ஏனெனில் கோயிலுக்கான போராட்டம் அரசியல் ரீதியானது அல்ல. மக்களிடம் பணம் பெறுதல் என்பதுசாதாரணமானது அல்ல. அதில் அரசியல் இருக்கிறது. ராமர் கோயிலுக்காக நன்கொடை பெறுகிறோம் என்ற பெயரில் சுயம்சேவக்குகள் நாடு முழுவதும் குறிப்பிட்ட அரசியல் கட்சிக்காக பிரச்சாரம் செய்ய இருக்கிறார்கள். 

மகர சங்கராந்தி நாளிலிருந்து சுமார் நான்கு லட்சத்துக்கும் மேற்பட்ட சுயம்சேவக்குகள் பன்னிரண்டு லட்சம் வீடுகளுக்கு செல்லப் போகிறார்கள்.இதுபோன்று அரசியலுக்காகச் செய்யப்படும் பிரச்சாரம் நடக்கவே கூடாது. பகவான் ராம் பெயரில் இந்த அரசியல் பிரச்சாரம் நிறுத்தப்பட வேண்டும். சுயம்சேவகர்கள் ஏதேனும் ஒரு கட்சியின் சார்பாக அரசியல் பிரச்சாரகராக சென்றால், அது ராமர் கோயிலுக்காக தங்களின் வாழ்க்கையை அர்ப்பணித்தவர்களுக்கு செய்யும் அவமரியாதையாகவே இருக்கும்.கோவில் கட்டுமானத்திற்குப் பிறகு,நாட்டின் ‘வளர்ச்சி’ என்பதுதான் பிரச்சாரத்தின் மையமாக இருக்க வேண்டும். மாறாக, ராமர் அல்ல. ஆனால் நடக்கும் காட்சிகள் அப்படித் தெரியவில்லை. 

இந்த சம்பார்க் பிரச்சாரம் (Samparkcampaign) 2024-ஆம் ஆண்டு இறைவன் ராமரின் பின்னால் ஒளிந்துகொண்டு நடத்தப்படும் ஒரு அரசியல் பிரச்சாரமாக தெரிகிறது.இவ்வாறு ‘சாம்னா’ ஏடு தனது தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளது.சிவசேனாவின் இந்த குற்றச்சாட் டிற்கு பாஜக எம்எல்ஏ ஆஷிஸ் ஷெல்லர் பதிலளித்துள்ளார். அதில், “சிவசேனா கட்சியினர் ராமருக்கு விரோதிகள். ராமர் கோயிலுக்கு பூமி பூஜை நடத்தும்போது அது நடக்கவிடாமல் இடையூறு செய்தது சிவசேனா கட்சிதான். இப்போது சாமானிய மக்கள் ராமர் கோயிலுக்கு தங்கள்பங்களிப்பைச் செய்யும்போது, அதையும் வழங்கவிடாமல் சிவசேனா தடுக்கப் பார்க்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

;