india

img

உலகக் கோப்பை சாம்பியனுக்கு கூலி வேலை,  ஒலிம்பிக் வீராங்கனைக்கு டீ எஸ்டேட்டில் வேலை - பா.ஜ.க அரசு

குஜராத் மாநிலம், நவ்சாரியைச் சேர்ந்தவர் நரேஷ் தும்டா. இந்திய அணிக்காகப் பலமுறை உலகக் கோப்பையில் விளையாடியுள்ளார். கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கான கிரிக்கெட் உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வென்று உலகக் கோப்பையைக் கைப்பற்றி
யது அஜய் குமார் ரெட்டி தலைமையிலான இந்திய அணி. இந்த அணியில் அஜய் குமார் ரெட்டியும் இடம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்
போது வறுமையின் காரணமாக நரேஷ் தும்டா குஜராத்தில் காய்கறி விற்பனை செய்தும், கூலி வேலை செய்து வருகிறார்.

இதுகுறித்து நரேஷ் தும்டா அளித்துள்ள கூறுகையில், உலகக் கோப்பை வென்ற பின் எப்படியும் எனக்கு ஏதாவது அரசு வேலை கிடைக்கும் என எதிர்பார்த்தேன். ஆனால், இதுவரை வேலை கிடைக்கவில்லை. குஜராத் முதல்வரிடம் 3 முறை அரசு வேலை தரக்கோரி வேண்டுகோள் விடுத்தேன். ஆனால், எந்தவிதமான பதிலும் இல்லை, பயனும் இல்லை. பலமுறை கோரிக்கை விடுத்தும் அரசின் சார்பிலும், பிசிசிஐ சார்பிலும் உதவித்தொகை வழங்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளார். 

அதேபோல், அசாம் மாநிலம் திப்ருகரைச் சேர்ந்த பிங்கி கர்மாக்கர் என்ற வீராங்கனை தான் படித்த பள்ளியில் யுனிசெப்பின் விளையாட்டு மேம்பாட்டுத் திட்டப் 
பொறுப்பாளராக பணியாற்றினார். அவரது திறமையை அங்கீகரிக்கும் விதமாக 2012 ஆம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் இந்தியத் தேசியக் 
கொடியை ஏந்தும் வாய்ப்பு வழங்கப்பட்டது.

லண்டனிலிருந்து பிங்கி சொந்த ஊர் திரும்பிய போது, பிரம்மாண்ட வரவேற்பும் அளிக்கப்பட்டது. ஆனால் அதன்பின் அசாம் அரசும், விளையாட்டு அமைப்புகளும் எந்தவித வசதிகளையும் செய்து தரவில்லை. இந்நிலையில் தற்போது குடும்பத்தைப் பாதுகாக்க டீ எஸ்டேட்டில் தினக்கூலியாக நாள் ஒன்றுக்கு ரூ.167 வருமானத்
தில் வேலை செய்து வருவதாகப் பிங்கி வேதனை தெரிவித்துள்ளார். 

இந்திய வீரர், வீராங்கனைகள் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்று வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய நிலையில், அவர்களால் தேசத்துக்குப் பெருமை என உணர்ச்சி பொங்கப் பேசும் பிரதமர் மோடி, விளையாட்டு வீரர்களைத் தொடர்ச்சியாக வஞ்சித்து வருவது வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

;