india

img

ஜே.என்.யுவில் இடதுசாரி மாணவர்கள் தாக்குவதாக சங்கிகள் பகிர்ந்த வீடியோ போலி என்பது மீண்டும் அம்பலம்

தில்லி ஜே.என்.யுவில், இடதுசாரி மாணவர்கள் தாக்குவதாக சங்கிகள் பகிர்ந்த  வீடியோ போலி என்பது மீண்டும் அம்பலமாகியுள்ளது.

தில்லி ஜே.என்.யுவில், பல்கலைக்கழக விடுதி கட்டண உயர்வை கண்டித்து, ஜே.என்.யு மாணவர் சங்கம் கடந்த 3 மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கடந்த 5-ஆம் தேதி இரவு முகமூடி அணிந்து சிலர் ஆயுதங்களோடு நுழைந்து அங்கிருந்த மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் மீது கொடூர தாக்குதலை நடத்தினர். இதில் மாணவர் பேரவை தலைவரான ஆய்ஷே கோஷ் உள்ளிட்ட ஏராளமான மாணவர்கள் படுகாயமடைந்தனர்.

இந்த தாக்குதலுக்கு முன்னதாக, ஏபிவிபி மாணவர்களை இடதுசாரி மாணவர்கள் தாக்கியதாக வீடியோ ஒன்று பொய்யான தகவல்களுடன் சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டு வருகிறது. இந்த வீடியோவை பத்திரிகையாளரான சுமித் குமார் சிங், பிரசார் பாரதி செய்தி நிறுவனம், ஜே.என்.யு-வின் துணை வேந்தர் மாமிடலா ஜகதீஷ் குமார் ஆகியோர் டிவிட்டரில் பகிர்ந்துள்ளனர். மேலும், பாஜகவின் இமாச்சல் பிரதேசத்தின் தொழில்நுட்ப குழு தலைவர் சேட்டன் பக்ரா, பாஜகவின் தேசிய தொழிநுட்ப குழுவின் தலைவர் அமித் மால்வியா, பாஜக செய்தி தொடர்பாளர் சுரேஷ் நக்வா, ஏபிவிபியை சேர்ந்த விகாஸ் படாரியா ஆகியோர் இந்த போலி செய்தியை டிவிட்டரில் பகிர்ந்து, டிரெண்டாக்கி வருகின்றனர். அந்த வீடியோவில், சிவப்பு நிற சட்டை அணிந்திருக்கும் மாணவர், ஒருவர் பச்சை சட்டை அணிந்துள்ள மாணவரை தாக்குவது போன்ற காட்சி உள்ளது. இந்த வீடியோவில் சிவப்பு சட்டை அணிந்திருக்கும் மாணவர் இடதுசாரி மாணவர் அமைப்பை சேர்ந்தவர் என்றும், தாக்கப்பட்ட மாணவர் ஏபிவிபி அமைப்பை சேர்ந்தவர் என்றும் டிவிட்டரில் சங்கிகள் இடதுசாரி மாணவர்கள் மீது பொய் பழி சுமத்தி வருகின்றனர்.

இந்நிலையில், ஏபிவிபியினர் தாக்கப்பட்டதாக பகிரப்படும் இந்த செய்தியின் உண்மைத் தன்மையை ’தி ஆல்ட் நியூஸ்’ ஆராய்ந்தபோது, இந்த வீடியோவில் சிவப்பு சட்டை அணிந்து வந்து தாக்கும் மாணவர், ஏபிவிபி அமைப்பை சேர்ந்த ஷர்வேந்தர் என்பதும், அவர் ஜே.என்.யுவின் எஸ்.ஐ.எஸ்-யில், மேற்கு ஆசிய ஆய்வு மையத்தில், 3-ஆம் ஆண்டு பி.எச்.டி மாணவர் என்பது தெரியவந்துள்ளது. மேலும் ஷர்வேந்தர், ஜே.என்.யு பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் மற்றும் ஆசிரியருடனான புகைப்படம் ஒன்றையும் ஆல்ட் நியூஸ் வெளியிட்டுள்ளது. மேலும் ஆல்ட் நியூஸ் ஷர்வேந்தரை போன் மற்றும் ஈமெயில் மூலம் தொடர்பு கொள்ள முயன்றபோது, அவரிடம் இருந்து எந்த தகவலும் இல்லை. 

 அதே சமயம், அந்த வீடியோவில் தாக்கப்படும் பச்சை சட்டை அணிந்திருக்கும் மாணவர் விவேக் பாண்டே என்பதும், இவர் ஜே.என்.யுவில், எம்.ஏ முதலாம் ஆண்டு மாணவர் என்பதும் தெரியவந்துள்ளது. ஆல்ட் நியூஸ் இந்த சம்பவம் குறித்து அவரிடம் விசாரித்த போது, அவரை தாக்கியவர் ஏபிவிபி அமைப்பை சேர்ந்த ஷர்வேந்தர் என்றும், இவர் அகில இந்திய மாணவர் அமைப்பை சேர்ந்தவர் என்றும் தெரிவித்தார். இந்நிலையில், இடதுசாரி மாணவர்கள் மீது ஏபிவிபி மாணவர்கள் தாக்குதல் நடத்தியது அம்பலமாகியுள்ளது.

;