india

img

டிசம்பர் 1 முதல் ஃபாஸ்டேக் இல்லாத வாகனங்களுக்கு இரு மடங்கு சுங்க கட்டணம்

இந்தியாவில் வரும் டிசம்பர் 1-ஆம் தேதி முதல், ஃபாஸ்டேக் இல்லாத அனைத்து  வாகனங்களுக்கும் இரு மடங்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படும் என தேசிய நெடுஞ்சாலைத் துறை அறிவித்துள்ளது.

தேசிய நெடுஞ்சாலை கட்டண விதிகள் 2008 படி, அனைத்து சுங்க சாவடியிலும் ஆர்.ஃப் ஐடி கொண்ட ஃபாஸ்டேக் வாகனங்கள் செல்வதற்காகப் பிரத்தியேக நுழைவு அமைக்கப்பட வேண்டும் எனவும், இந்த நுழைவில் ஃபாஸ்டேக் இல்லாத வாகனங்கள் நுழைந்தால் இரட்டிப்புக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும் எனவும் ஏற்கனவே நடைமுறையில் இருந்தது. இதைத் தற்போது உறுதியாகக் கடைபிடிக்க தேசிய நெடுஞ்சாலைத் துறை முடிவு செய்துள்ளது. இந்நிலையில், வரும் டிசம்பர் 1-ஆம் தேதி முதல், ஃபாஸ்டேக் இல்லாத அனைத்து  வாகனங்களுக்கும் இரு மடங்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படும் என நெடுஞ்சாலைத் துறை அறிவித்துள்ளது.

இது குறித்து தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கூறுகையில், ”அனைத்து சுங்கச் சாவடியிலும் ஒரு ஹைபிரிட் நுழைவு இருக்கும். இதில் ஃபாஸ்டேக் உள்ள வாகனங்களும், ஃபாஸ்டேக் இல்லாத வாகனங்களும் நுழையும் வகையில் தற்போதைய நிலையில், அமைக்கப்பட்டு உள்ளது. டிசம்பர் 15 வரையில் டெல்லி, என்சிஆர் பகுதியில் 100 சதவீதம் எலக்ட்ரானிக் சுங்க சாவடி இயங்கி வருகிறது. பஞ்சாப், குஜராத், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் முழுவீச்சில் இந்தப் பணிகளைச் செய்து வருகிறது. டிசம்பர் 15 வரையில் நாடு முழுவதும் 80 சதவீத சுங்க சாவடிகளில் 100 சதவீதம் எலக்ட்ரானிக் முறையில் இயங்கும்” என்று தெரிவித்தனர்.
 

;