india

img

வாரணாசி விவசாயிகள் போராட்டம்! மிரண்டு போன பாஜக அரசு

வாரணாசி, ஏப்.26 - பிரதமர் மோடி தொகுதியான வாரணாசியில் நில உரிமைக்கான போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயி களை உத்தரப்பிரதேச பாஜக அரசு நள்ளிரவில் கைது செய்துள்ளது. தங்கள் நிலங்களைப் பாது காப்பதற்காகக் கடந்த மூன்று மாதங் களாக விவசாயிகள் வாரணாசியில் போராடி வந்தனர்.

அவர்களின் போரா ட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், விவசாயிகள் சங்கமும் முழு ஆதரவை வழங்கின. இந்நிலையில் இந்தப் போராட்டத்திற்கு மக்கள் மத்தி யில் ஆதரவு கிடைத்து வருவதைக் கண்டு மிரண்டு போன பாஜக அரசு, விவசாயிகளைக் கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஏழு  கட்டங்களாக மக்களவைத் தொகுதி களுக்கான வாக்குப்பதிவு நடை பெறுகிறது. பிரதமர் மோடி போட்டி யிடும் வாரணாசி தொகுதியில் கடைசிக் கட்டத்தில், அதாவது ஜூன் 1 ஆம் தேதி வாக்குப்பதிவு நடக்கவிருக்கிறது. மாநிலத்தின் பல பகுதிகளிலும் பாஜக வின் ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் மீது கடும் அதிருப்தி நிலவுகிறது. விவசாயிகள் போராட்டம் மேலும் பாதிப்பை ஏற்படுத்திவிடும் என்பதால், அதைக்குலைக்கும் வகையில் கைது நடவடிக்கை நடந்துள்ளது.

;