india

img

இந்தியாவில் 23 போலி பல்கலைக்கழகங்கள் – யுஜிசி தகவல்

நாடு முழுவதும் 23 போலி பல்கலைக்கழகங்கள் இயங்கி வருவதாக யுஜிசி எனப்படும் பல்கலைக்கழக மானியக் குழு நேற்று பட்டியல் வெளியிட்டுள்ளது.

உயர் கல்வி பயிலும் மாணவர்களின் நலனைக் கருத்தில்கொண்டு, உரிய அங்கீகாரம் பெறாமல் இயங்கி வரும் போலி பல்கலைக்கழகங்களை ஆய்வு செய்து அதன் விவரத்தை யுஜிசி வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் நாடு முழுவதும் 23 பல்கலைக்கழகங்கள் அங்கீகாரம் இல்லாமல் பெயரளவுக்கு சுயமாக வடிவமைத்துக் கொண்டு போலியாக செயல்படுவதாக தெரிவித்துள்ளது. 

இந்த 23 பல்கலைக்கழகங்களில் அதிகபட்சமாக உத்தரப்பிரதேச மாநிலத்தில் 8 பல்கலைக்கழகமும், டெல்லியில் 7 பல்கலைக்கழகங்களும், மேற்குவங்காளம் மற்றும் ஒடிசாவில் தலா 2 பல்கலைக்கழகங்களும், கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் புதுச்சேரியில் தலா ஒரு பல்கலைக்கழகமும் அங்கீகாரம் இல்லாமல் இயங்கி வருகிறது. 

இந்த பல்கலைக்கழகங்களின் பெயர்களையும் யுஜிசி வெளியிட்டுள்ளது.

1.வாராணசி சம்ஸ்கிருத விஸ்வ வித்யாலயா (உத்தரப் பிரதேசம்) 
2.மஹிலா கிராம் விஸ்வ வித்யாலயா (உத்தரப் பிரதேசம்)
3.காந்தி ஹிந்தி வித்யாபீடம் (உத்தரப் பிரதேசம்)
4.தேசிய எல்க்ட்ரோ காம்பிளக்ஸ் ஹோமியோபதி பல்கலைக்கழகம் (உத்தரப் பிரதேசம்)
5.நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் திறந்தநிலை பல்கலைக்கழகம் (உத்தரப் பிரதேசம்)
6.உத்தரப் பிரதேச விஸ்வ வித்யாலயா (உத்தரப் பிரதேசம்)
7.மஹராணா பிரதாப் சிக்ஷ நிகேதன் விஷ்வ வித்யாலயா (உத்தரப் பிரதேசம்)
8.இந்திரபிரஸ்த சிக்ஷ பல்கலைக்கழகம் (உத்தரப் பிரதேசம்)
9.கமர்ஷியல் பல்கலைக்கழக நிறுவனம் (டெல்லி)
10.யுனைடெட் நேஷன்ஸ் பல்கலைக்கழகம் (டெல்லி)
11.தொழிற்கல்வி பல்கலைக்கழகம் (டெல்லி)
12.ஏடிஆர் சென்ட்ரிக் ஜூரிடிக்கல் பல்கலைக்கழகம் (டெல்லி)
13.இந்திய அறிவியல் மற்றும் பொறியியல் நிறுவனம் (டெல்லி)
14.ஆத்யாத்மிக் விஸ்வத்யாலயா (ஆன்மிகப் பல்கலைக்கழகம்) (டெல்லி)
15.விஸ்வகர்மா திறந்தநிலை பல்கலைக்கழகம் (டெல்லி)
16.நவபாரத் சிக்ஷ பரிஷத் (ஒடிசா)
17.வடக்கு ஒடிசா வேளாண்மை மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் (ஒடிசா)
18.இந்திய மாற்று மருந்துக்கான கல்வி நிறுவனம் (மேற்கு வங்கம்)
19.மாற்று மருந்து மற்றும் ஆராய்ச்சிக் கல்வி நிறுவனம் (மேற்கு வங்கம்)
20.ராஜா அரபிக் பல்கலைக்கழகம் (மகாராஷ்டிரா)
21.பதகன்வி சர்கார் கல்விச் சமூகத்துக்கான சர்வதேச திறந்தநிலை பல்கலைக்கழகம் (கர்நாடகம்)
22.செயின்ட் ஜான்ஸ் பல்கலைக்கழகம் (கேரளம்)
23.ஸ்ரீபோதி உயர்கல்வி அகாடெமி (புதுச்சேரி)

ஆகியவை போலி பல்கலைக்கழகம் பட்டியலில் இடம்பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.

;