ஒடிசா மாநிலத்தில் வசிக்கும் பழங்குடியினர் விரும்பி உண்ணும் உணவாக சிவப்பு எறும்பு சட்னிக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா சட்டசபை சிவசேனா குழு தலை வர் பதவியில் இருந்து ஏக்நாத் ஷிண்டேவை உத்தவ் தாக்கரே நீக்க முடியாது; உத்தவ் தாக்க ரேவுக்கு சிவசேனா கட்சி விதிகளின் படி அதிகாரம் இல்லை என மகாராஷ்டிரா சபாநாயகர் ராகுல் நார்வேகர் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளார்.
ராமர்கோவில் திறப்பு குறித்து பேசிய ஏஐ எம்ஐஎம் தலைவர் அசாதுதின் ஓவைசியின் நாக்கை அறுத்தால் ரூ.11 லட்சம் அளிப்பதாக இந்து சேனா அமைப்பு சர்ச்சைக்குரிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பாஜக எம்.பி.யின் ஆபாச செயலை அம்ப லப்படுத்திய மராட்டிய டி.வி. லோக் ஷாகி ஒளிபரப்புக்கு ஒன்றிய அரசு 30 நாட்கள் தடை விதித்துள்ளது.
சுற்றுச்சாலை விவகாரம், சாராய கொள்முதல், மணல் கொள்ளை ஆகிய 3 வழக்குகளிலும் தெலுங்கு தேச தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கு ஆந்திர உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
தெலுங்கு தேச மூத்த தலைவரும், அக்கட்சியின் எம்பியுமான கேஷினேனி நானி ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி முன்னிலையில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்.
நுழைவுத் தேர்வுக்கான தனியார் பயிற்சி மையங்களுக்கு கட்டுப்பாடுகள் விதித்து புதிய வரைவு வழிகாட்டி நெறிமுறைகளை வெளி யிட்டுள்ளது ஒன்றிய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம்.
பீகார் மாநிலம் பாகல்பூர் அருகே உள்ள நவ்டோ லியா கிராமத்தில் சாந்தினி குமாரி (23), சந்தன் குமார் (40) ஆகிய இருவரும் 3 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்ட னர். இத்தம்பதிக்கு ரோஷனி குமாரி என்ற 2 வயது பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் புதனன்று சாந்தினி குமாரியின் தந்தை மற்றும் அவரது சகோ தரர் ஆகிய இருவரும், சாந்தினி குமாரி, அவரது மகள், கணவரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர்.
பாஜக ஆளும் மத்தியப்பிரதேச மாநிலத்தின் சாகர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 17 வயது சிறுமி பாலியல் வன் கொடுமை செய்யப்பட்டார். அந்த சிறுமியின் 8 வார கர்ப்பத்தை கலைக்க அம்மாநில உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
ஜெய்ப்பூர்
ஓடும் பேருந்தில் பெண் பாலியல் பலாத்காரம்
பாஜக ஆளும் ராஜஸ்தான் மாநி லத்தில் டீக் மாவட்டத்தைச் சேர்ந்த 30 வயது பெண் திங்க ளன்று சொந்த ஊருக்குச் செல்வதற்காக பேருந்துக்காக காத்திருந்தார். இரவு நேர மாகி விட்டதால் பேருந்து கிடைக்காமல் அவதிப்பட்டுள்ள நிலையில், பயனாவில் இருந்து பரத்பூர் செல்லும் தனியார் பேருந்து நடத்துநர் அந்த பெண்ணை பேருந்தில் ஏறச்சொல்லியுள்ளார். ஆனால் அப்பெண் வேறு ஊருக்குப் போகவேண்டும் என் றும், அதற்காக காத்திருப்பதாகவும் கூறி யுள்ளார். போகும் வழியில் வேறு பேருந் தில் ஏற்றி விடுகிறேன் என்று கூறி நடத்து நர் ஓடும் பேருந்திலேயே அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண் செவ் வாயன்று காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தனியார் பேருந்து நடத்துநர் ஜிதேந்திர சிங் குஜ்ஜாரை (32) போலீசார் கைது செய்ததுடன் பேருந்தையும் பறி முதல் செய்தனர். தில்லி நிர்பயா சம்பவம் போல ராஜஸ்தானிலும் ஓடும் பேருந்தில் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப் பட்ட சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லக்னோ
ராமர் கோவில் அறக்கட்டளை - விஎச்பி இடையே மோதல்
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தி யில் புதிதாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் ஜனவரி 22-ஆம் தேதி திறக்கப்படுகிறது. இந்த திறப்பு விழாவில் கார்ப்பரேட் தொழிலதிபர்கள், திரைத்துறை மற்றும் விளையாட்டுத் துறை பிரபலங்களுக்கு அழைப்பு விடுக் கப்பட்டுள்ளது. ஆனால் முன்னாள் துணைப் பிரதமரும், மூத்த பாஜக தலைவ ருமான அத்வானியை ராமர் கோவில் விழாவுக்கு வர வேண்டாம் என்று ராம ஜென்ம பூமி அறக்கட்டளை வேண்டு கோள் விடுத்திருந்தது. வயது மூப்பு கார ணமாகவே அத்வானி ராமர் கோவி லுக்கு வர வேண்டாம் எனக் கூறியதாக அறக்கட்டளை விளக்கம் அளித்துள்ளது. இந்நிலையில், ராமர் கோவில் திறப்பு விழாவில் அத்வானி கண்டிப்பாக கலந்து கொள்வார் என விஷ்வ இந்து பரிஷத் (விஎச்பி) அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பால் அயோத்தியில் விஎச்பி - ராமஜென்ம பூமி அறக்கட்டளை இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக தக வல் வெளியாகியுள்ளது.