india

img

“மோடியை காணவில்லை” என சுவரொட்டி ஒட்டிய மணிப்பூர் மக்கள்

வகுப்புவாத அரசியலால் பாஜக ஆளும் மணிப்பூர் மாநிலம் கடந்த ஒரு வரு டத்திற்கு மேலாக வன்முறை சம்ப வங்களால் பற்றி எரிந்து வருகிறது.  உள்நாட்டு போருக்கு இணையான கலவரத்தால் மாநிலமே உருக்கு லைந்துள்ள நிலையில், வன்  முறைக்கு இதுவரை 230 பேர் பலி யாகியுள்ளனர். லட்சக்கணக்கான மக்  கள் சொந்த மாநிலத்திலேயே அகதி களாக வாழ்ந்து வரும் நிலையில், மணிப்பூரில் வன்முறை தொடங்கி மே 3 அன்றுடன் ஓராண்டைக் கடந்துள்  ளது.

வன்முறை ஓராண்டைக் கடந்தா லும், இன்னும் வன்முறை சம்பவங்  கள் முடிவுபெறவில்லை. நாள்தோறும் வன்முறை சம்பவங்கள் மிக மோச மான அளவிலேயே அரங்கேறி வரும்  நிலையில், “நாட்டை முன்னோக்கி எடுத்து செல்கிறோம். பெண் வலி மைக்கு முக்கியத்துவம் தருகிறோம்”  என பேசும் பிரதமர் மோடி இன்னும் மணிப்பூருக்கு செல்லாமல் அம் மாநில மக்களை புறக்கணித்து வரு கிறார்.

மணிப்பூர் கலவரம் தொடங்கிய பிறகு பிரதமர் மோடி 162 முறை நாட்  டின் பல்வேறு மாநிலங்களுக்கு சென்  றுள்ளார். இந்த 162 சுற்றுப்பயணத்தில் ஒரு முறை கூட மணிப்பூருக்காக மோடி நேரம் ஒதுக்கவில்லை. மணிப் பூரின் அண்டை மாநிலங்களான அசாம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு வருகை தந்துள்ள மோடி, கர்நாடக சட்டமன்ற தேர்தலுக்காக ஒரே ஆண்  டில் 8 முறையும், மோடியின் சொந்த மாநிலமான குஜராத்திற்கு 10 முறை யும், உத்தரப்பிரதேசத்திற்கு 17 முறை யும் சென்றுள்ளார். மேலும் இந்தியா வை விட்டு வெளிநாடுகளுக்கும் 14  முறை சுற்றுப்பயணம் மேற்கொண் டுள்ள மோடி, அதில் ஒரு முறை ஐக்  கிய அமீரகத்தில் கோவில் திறப்பிற்  கும் சென்று ஷூட்டிங் ஸ்பாட் நடத்தி யுள்ளார். ஆனால் மணிப்பூரில் கால டிவைக்கவில்லை அவருக்கு மன மில்லை. பிரதமர் மோடிக்காக மணிப்  பூர் செல்வதை தவிர்க்கவே பாஜக மேலிடம் போட்டியிடாமல் அங்குள்ள 2 மக்களவை தொகுதியையும் கூட்ட ணிக் கட்சிக்கு கொடுத்து ஓட்டம் பிடித்தது.

இந்நிலையில், “மோடியை காண வில்லை” என மணிப்பூர் மக்கள் சுவ ரொட்டி ஒட்டியுள்ளனர். அச்சுவ ரொட்டியில்,”பெயர்: நரேந்திர மோடி;  உயரம்: 5’6” அடி; மார்பளவு: 56” ; கண்  பார்வையற்றவர்; காது கேளாதவர்; கடைசியாக பார்த்த இடம்: கடந்த மணிப்பூர் சட்டமன்ற தேர்தல்” என் றும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

டாப் டிரெண்டிங்:  கதறும் பாஜக
“மோடியை காணவில்லை” என  மணிப்பூர் மக்கள் சுவரொட்டி ஒட்டி யுள்ள விவகாரத்தை “கோடி மீடியா”  மூலம் பாஜகவினர் மூடி மறைத்தா லும், சுவரொட்டி டாப் டிரெண்டிங்கில் வைரலாகி வருகிறது. மக்களவை தேர்தல் நேரத்தில் பல்வேறு சம்ப வங்களால் பாஜகவின் நிலைமை  மிக மோசமாக உள்ள நிலையில், தற் போது “மோடியை காணவில்லை” என மணிப்பூர் மக்கள் சுவரொட்டி விவகாரம் பாஜகவை கதற வைத் துள்ளது.

;