சிகார்(ராஜஸ்தான்), மார்ச் 27-
ராஜஸ்தான் மாநிலம் சிகார் தொகுதியில் இந்தியா கூட்டணியின் வேட்பாளராகக் களம் இறங்கியுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் அம்ரா ராமுக்கு ஆதரவாக ஆயிரக்கணக் கான மக்கள் திரண்டு வந்து ஆதரவு தெரிவித்துள்ளனர்.
செவ்வயன்று வேட்பு மனு வைத் தாக்கல் செய்த பின்னர், பெரும் ஆதரவு ஊர்வலம் நடத் தப்பட்டது. ஆயிரக்கணக்கான மக் கள் பங்கேற்ற இந்த ஊர்வலத்தின் நிறைவில் பிரச்சாரப் பொதுக்கூட் டம் நடைபெற்றது. இதில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசி யல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத், ராஜஸ்தான் முன் னாள் முதலமைச்சர் அசோக் கெலாட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் நரேந்திர ஆச் சார்யா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பி னர் விஜூ கிருஷ்ணன், காங்கிரஸ் கட்சியின் ராஜஸ்தான் மாநிலத் தலைவர் கோவிந்த் சிங் தோதா செரா உள்ளிட்டோர் கலந்து கொண் டனர்.
அம்ரா ராம் வெற்றி உறுதி
பாஜகவைத் தோற்கடிக்க வேண் டிய அவசியத்தை உணர்ந்தே, இந் தியா கூட்டணி உருவாக்கப்பட்டது என்றும், அதன் தொடர்ச்சியாகவே ராஜஸ்தானிலும் தொகுதி உடன் பாடு காணப்பட்டு, சிகார் தொகுதி யில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அம்ரா ராம் போட்டியிடு கிறார் என்று அசோக் கெலாட் குறிப் பிடுகையில், ‘அம்ரா ராம் வெல் வார்’ என்ற முழக்கம் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ் மற்றும் இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் ஆதரவாளர்கள் மட்டுமின்றி ஆம் ஆத்மி கட்சி, ராஷ் டிரிய லோக்தந்திரிக் கட்சி உள் ளிட்டவற்றைச் சேர்ந்தவர்களும் பெரும் திரளாகக் கலந்து கொண் டர்கள்.
‘இந்தியா’ கூட்டணியுடன் விவசாயிகள்
தொடர் போராட்டங்கள் நடந் தும் தங்கள் பிரச்சனைகளை பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு கண்டுகொள்ளவில்லை என்ற கொதிப்பு ராஜஸ்தான் மாநில விவ சாயிகள் மத்தியில் நிலவுகிறது. விவசாயிகள் போராட்டங்களை ஒருங்கிணைத்துப் பல்வேறு வெற்றிகளை ஈட்ட முன்னோடியாக நின்று வரும் அம்ரா ராம், இந் தியா கூட்டணியின் சார்ப்பில் தேர்த லில் போட்டியிடுவது விவசாயிகள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி யுள்ளது. தங்கள் குரல் சரியான வகையில் மக்களவையில் ஒலிக் கும் என்று கூறுகிறார்கள். அம்ரா ராமின் மனுதாக்கல் நிகழ்வு தொடங்கி, பிரச்சாரக் கூட்டங்கள் வரையில் விவசாயிகளின் பங் கேற்பு பெரிய அளவில் இருந்து வருகிறது.
உற்சாகம்
காங்கிரஸ், ராஷ்டிரிய லோக் தாந்திரிக் கட்சி மற்றும் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கி டையில் தொகுதி உடன்பாடு ஏற் பட்டுள்ளதால் இந்தியா கூட்டணி யில் பெரும் உற்சாகம் காணப்படு கிறது. நாகோர் தொகுதியில் ராஷ்டி ரிய லோக்தாந்திரிக் கட்சியின் தலை வர் ஹனுமன் பெனிவால் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்படு கிறது. மேலும், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சிக்கு செல்வாக்குள்ள சுரு, பிகானிர் மற்றும் ஜுன்ஜுனு ஆகிய மக்களவைத் தொகுதிகளில் கூட்டணிக்கு ஆதரவு திரண்டு வரு கிறது.