india

ஜனநாயகத்தை கொல்லாதே... மணிப்பூருக்கு நீதி வேண்டும்... சர்வாதிகாரம் ஒழிக...!

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதங்களுக்கு திங்களன்று பிரதமர் மோடி பதி லளித்தார். எதிர்க்கட்சிகளின் உரைக்கு பதில் அளிக்காமல் பிர தமர் மோடி,”உலகின் மிகப்பெரிய  தேர்தல் பிரச்சாரத்தில் பொது மக்கள் எங்களைத் தேர்ந்தெடுத் துள்ளனர். இது சிலருக்கு வலியை  ஏற்படுத்தி இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. தொட ர்ச்சியான பொய்களை பரப்பிய வர்களுக்கு பெரும் தோல்விதான் கிடைத்தது. காங்கிரஸ் கட்சி 100  தொகுதிகளை கூட வெல்ல வில்லை” என கூறினார்.

எதிர்க்கட்சிகளை கிண்டல் செய்யாமல் பதிலுரை கூறுங்கள்  என காங்கிரஸ், திமுக, சமாஜ்  வாதி உள்ளிட்ட “இந்தியா” கூட்  டணி எம்.பி.க்கள் போராட்டத்தில்  ஈடுபட்டனர். ஆனால் பிரதமர் மோடி,  2014ஆம் ஆண்டிற்கு முந்தைய காங்கிரஸ் ஆட்சியை பற்றியும், காங்கிரஸ் ஒரு ஒட்டுண்ணி என்று  கூறி வழக்கமான வெறுப்பு சார்ந்த பேச்சுக்களை பேசிய நிலையில், “இந்தியா” கூட்டணி எம்பிக்கள் அவையின் மையப் பகுதிக்கு சென்று மோடியின் பேச்சுக்கு எதி ராக பல்வேறு முழக்கங்களை எழுப்பினர். மணிப்பூர் பிரச்சனை குறித்து விவாதிக்க வேண்டும்; நீட் தேர்வு முறைகேடுகள் குறித்து  விவாதிக்க வேண்டும் என்று கூறி  ஜனநாயகத்தை கொல்லாதே... மணிப்பூருக்கு நீதி வேண்டும்...  சர்  வாதிகாரம் ஒழிக... என எதிர்க்கட்சி எம்பிக்கள் முழக்கமிட்டனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த எம்பிக்  கள், கொல்லாதே .கொல்லாதே... ஜனநாயகத்தைக் கொல்லாதே.. நீதி வேண்டும்.. நீதி வேண்டும்..  மணிப்பூருக்கு நீதி வேண்டும் என  தமிழில் முழக்கமிட்டனர். எதிர்க்  கட்சி எம்.பி.க்களின் முழக்கங்க ளால் பிரதமர் மோடி சிறிது நேரம் தனது பேச்சை நிறுத்தினார். மீண்  டும், ஜம்மு-காஷ்மீரில் அமைதி திரும்பிவிட்டது எனவும் தமிழ்நாட் டில் பாஜகவின் வாக்கு சதவீதம் அதிகரித்திருக்கிறது எனவும் பேசத்  துவங்கினார்.

;