india

img

ஹைதராபாத் என்கவுண்ட்டர் திட்டமிட்ட படுகொலை

சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்

சென்னை, டிச. 6 - தெலுங்கானா என்கவுண்ட்டர் ஒரு திட்டமிட்ட படுகொலை என்று  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார். டாக்டர் அம்பேத்கரின் 63வது நினைவுதினம் வெள்ளியன்று (டிச.6) நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி சென்னை சைதாப் பேட்டை எம்.சி.ராஜா விடுதியில் உள்ள  அவரது உருவச் சிலைக்கு கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநிலச் செய லாளர் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட் டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கே.பாலகிருஷ்ணன், “சாதியக் கொடுமைகளை, கட்டமைப்பை, வர்ணா சிரமத்தை எதிர்த்து வாழ்நாள்  முழுவதும் போராடியவர் அம்பேத்கர். ஆனால், இன்றைக்கும் சாதிய கொடுமைகள் தலை விரித்தாடுகிறது. கூலித் தொழிலாளிகளாக உள்ள தலித் மக்கள் பொருளாதார சுரண்டலுக்கு மட்டுமல்ல, சமூக ரீதியாகவும் சுரண் டப்படுகின்றனர். சாதிய கொடுமைக்கு உள்ளாக்கப்படுவது தொடர்கிறது என்றார். “தலித் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, சமூக ஒடுக்குமுறை யிலிருந்து விடுவிப்பதற்கு ஆக்கப் பூர்வமான நடவடிக்கையை ஆட்சி யாளர்கள் எடுக்கவில்லை. பொருளா தார சுரண்டலுக்கு, சமூக கொடுமை களுக்கு உள்ளாகியுள்ள மக்களைத் திரட்டி சமூக மாற்றத்திற்காக மார்க் சிஸ்ட் கட்சி போராடுகிறது. தீண்டாமை உள்ளிட்ட அனைத்து கொடுமைகளை யும் எதிர்த்து தொடர்ந்து போராட உறுதியேற்கிறது” என்றும் அவர் கூறினார்.

வெங்காய விலையேற்றம் குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கூறியது தொடர்பாக செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், “துணி களின் விலைகள் கூட உயர்கிறது. அதற்காக ஆடை உடுத்தாதீர்கள் என்று சொல்வாரா? மத்திய நிதியமைச்சர் கொச்சைத்தனமாக பதில் அளித் திருக்கிறார்” என்று தெரிவித்தார். திட்டமிட்ட படுகொலை தெலுங்கானா என்கவுண்ட்டர் குறித்த கேள்விக்கு பதிலளித்த பாலகிருஷ்ணன், “கால்நடை மருத்து வர் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவத் தில் தொடர்புடைய கொலைகாரர் களுக்கு அதிகபட்சமான தண்டனை வழங்க வேண்டும். அதை, அரசி யலமைப்பு சட்டப்படி  நீதிமன்றம் மூலம் தான் வழங்க வேண்டும். மாறாக, காவல் துறையே அதிகாரத்தை எடுத்துக் கொண்டு 4 பேரையும் என்கவுண்டர் செய்திருப்பது விபரீதமான விளைவு களையே ஏற்படுத்தும்.

சட்டப்படி தண்டனை

அதிகாலையில், குற்றவாளி களை சம்பவ இடத்திற்கு அழைத்து சென்றி ருக்கிறர்கள். அவர்கள் தப்பி ஓடி இருந்தால் கூட ஒருவரை சுட்டிருப் பார்கள். காலில் சுட்டிருக்க வேண்டும். 4 பேரையும் சுட்டுச் சாகடித்திருப்து திட்ட மிட்ட படுகொலை. இது ஏற்புடைய தல்ல. குற்றவாளிகளுக்கு சட்டப்படி யாக தண்டனை வழங்க வேண்டும். மாறாக போலி என்கவுண்ட்டர்களை அனுமதித்தால் பல அப்பாவிகளும் இதுபோன்ற கொடுமைக்கு ஆளாவார்கள்” என்றார்.
 

;