india

ஒமைக்ரான் அச்சுறுத்தல் நீங்கவில்லை : ஒன்றிய அரசு

புதுதில்லி,மார்ச் 22- இந்தியாவில் இருந்து ஒமைக்ரான் வகை கொரோனா தொற்று அச்சுறுத்தல் நீங்கவில்லை என்று ஒன்றிய அரசு எச்சரித்துள்ளது.  கொரோனா வைரஸ் தொற்று பரவல் இந்தியா உட்பட உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியது. மருத்துவர்களின் தீவிர ஆராய்ச்சியால் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு , மக்களுக்கு செலுத்தப்பட்டது. இதன்பின்னரே உலகம் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. ஆனால் சில நாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.  இந்த நிலையில், கொரோனா நான்காவது அலை வரும் என்று தெரிவிக்கப்படுகிறது. ஆனால் இது வெறும் ஊகம் என்று ஒரு தரப்பு மருத்துவ வல்லுநர்கள்  கூறி வருகின்றனர். இதுபற்றி ஐ.ஐ.டி. கான்பூர் ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்தியாவில் கொரோனா நான்காவது அலையானது வருகிற ஜூன் 22 ஆம் தேதி தொடங்கி அக்டோடபர் 24 ஆம் தேதி வரை நீடிக்கும் என்றும்  புதிய கொரோனா வகைகளின் வெளிப்படுதல் மற்றும் பூஸ்டர் டோஸ் உள்பட மக்களின் தடுப்பூசி நிலை ஆகியவற்றுக்கு ஏற்பவே நான்காவது அலையின் கடுமை அமையும்.  ஒருவேளை நான்காவது அலை பரவல் தோன்றினால், அது 4 மாதங்கள் வரை இருக்கும் என தெரிவித்தது. இந்த அலையானது ஆகஸ்டு 15 ஆம் தேதி முதல் ஆகஸ்டு 31 ஆம் தேதி வரை உச்சமடையும்.  அதன்பின்னர் குறைய தொடங்கும் என ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.  நாட்டில் கொரோனா அலை பற்றி மூன்றாவது முறையாக ஐ.ஐ.டி. கான்பூர் கணித்து வெளியிட்டுள்ளது.

;