india

img

அகவிலைப்படி வெட்டு மனிதாபிமானமற்றது : ராகுல்

புதுதில்லி, ஏப்.25- மத்திய அரசாங்கம், கோவிட்-19 தொற்று காலத்தில் “வீணான செலவினங்களை” (“Waste ful expenditure”) வெட்டுவதற்குப் பதிலாக, அகவிலைப்படி (DA) மற்றும் அகவிலை நிவார ணம் (DR) ஆகியவற்றை முடக்கியிருப்பதன் மூலம், மத்திய அரசு ஊழியர்கள், மற்றும் ஓய்வூதியர்களுக்கு ஊறு விளைவித்தி ருக்கிறது:  அரசாங்கத்தின் இந்தச்செயல், “கூரு ணர்வற்றது மற்றும் மனிதாபிமானமற்றது” (“in sensitive and inhuman) என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரி வித்துள்ளார்.

அவர் மேலும், “புல்லட்  ரயில் திட்டம், மத்திய தில்லியில் மத்திய அரசு அலுவலகங்க ளை அழகுபடுத்தும் திட்டம் போன்று பல லட்சம் கோடி ரூபாய் திட்டங்களை சஸ்பெண்ட் செய்வதற்குப் பதிலாக, கோவிட்-19 தொற்றுக்கு எதிராகக் கடுமையாகப் போராடி, மக்களுக்கு சேவை செய்து கொண்டிருக்கிற ஊழியர்கள், ஓய்வூதியர்கள் மற்றும் ராணுவ வீரர்களின் அகவிலைப்படியை வெட்டியிருப்பதன் மூலம், அரசாங்கம் மனிதாபிமானமற்ற முடிவினை எடுத்திருக்கிறது,” என்றும் கூறிப்பிட்டிருக்கிறார்.

ரண்தீப் சுர்ஜேவாலா

காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர், ரண்தீப் சுர்ஜேவாவா, இணைய தளம் மூலமான பத்திரிகையாளர் சந்திப்பில், ராகுல் காந்தியின் கருத்துக்களை எதிரொலித்தி ருக்கிறார்.

“வீண் செலவினங்களைக் கட்டுப்படுத்துவதற்குப் பதிலாக, அரசாங்கம் அதன் ஊழியர்கள் மற்றும் மத்திய தர மக்களின் வரு மானத்தைத் தொடர்ந்து தாக்கிக் கொண்டிருக்கிறது. 2021 ஜூன் வரையிலும் அகவிலைப்படியை முடக்குவதன்மூலம் ஊழியர்கள், ஓய்வூதியர்கள் மற்றும் ராணுவவீரர்களுக்குப் போய்ச்சேர வேண்டிய  38,000 கோடி ரூபாய் அரசாங்கத்தி ற்குக் கிடைத்திடும்.

பிரதமர் நரேந்திர மோடி, ஆயுதப் படைக ளில் பணியாற்றும் 15 லட்சம் ஊழியர்கள் மற்றும் 26 லட்சம் மிலிடரி ஓய்வூதியர்களின் 11 ஆயிரம் கோடி ரூபாயையும் கழித்துள்ளார். அவர்கள் செய்த தவறு என்ன?

ஒருபக்கம் மாநில அரசாங்கங்களும், தனியார் முதலாளிகளும் தங்கள் ஊழியர்களின் ஊதியங்களை வெட்டக்கூடாது என்று வேண்டுகோள் விடுக்கிறீர்கள். மறுபக்கத்தில் தன் சொந்த ஊழியர்களின் ஊதியங்களை - சுமார் 113 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களின் ஊதியங்களை – 38 ஆயிரம் கோடி ரூபாய்களை -   வெட்டுகிறீர்கள். இதேபோன்று நீங்களும் செய்துகொள்ளுங்கள் என்று இது, தனியார் துறையினரை ஊக்கப் படுத்தாதா? மாநில அரசாங்கங்களை ஊக்கப் படுத்தாதா?

கடந்த ஒரு மாதத்தில் பொதுத்துறை வங்கி கள் தங்கள் டெபாசிட்தாரர்களுக்கு அளித்து வந்த வட்டி விகிதங்களையும் குறைத்திருக்கின் றன. இவை சாமானிய மக்களின் சேமிப்புகளைக் கடுமையாகப் பாதித்திருக்கின்றன. இவ்வாறு ரண்தீப் சுர்ஜேவாவா, கூறி யிருக்கிறார்.

(ந.நி.)
 

;